விஜய்யின் அரசியல் பிரவேசம்.. நிறைவேறாமல் போன எஸ்.ஏ.சந்திரசேகர் ஆசை.. நடந்திருந்தா சூப்பரா இருந்திருக்கும்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கும் விஜய் அடுத்த வருடம் நடக்கவிருக்கும் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் களமிறங்கவிருக்கிறார். அரசியலுக்கு வந்துவிட்டதால் சினிமாவுக்கு முழுக்கு போடவிருக்கும் அவருக்கு; ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் பேசியிருக்கும் விஷயம் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
கோலிவுட்டில் தனக்கென தனி சாம்ராஜ்ஜியத்தை கட்டியெழுப்பியிருக்கும் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என அவரது ரசிகர்கள் ஆசைப்பட்டார்கள். அதற்கேற்றபடி சில வருடங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். தொடங்கிய கையோடு மக்களவைத் தேர்தலில் போட்டியிடுவார் என்றுதான் பலரும் நினைத்தார்கள். ஆனால் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில்தான் போட்டியிடுவோம் என்று அறிவித்துவிட்டார்.
கரூர் துயர சம்பவம்: அரசியல் கட்சி தொடங்கி திமுகவைத்தான் கடுமையாக அட்டாக் செய்துவருகிறார். இது ஒருபக்கம் இருக்க மக்களையே சந்திக்க மறுக்கிறார் என்ற விமர்சனங்கள் எழுந்த சூழலில்; உங்கள் விஜய் நா வரேன் என்கிற பெயரில் தமிழ்நாடு முழுவதும் சென்று மக்களை சந்திக்க ஆரம்பித்தார். அப்படி கரூருக்கு செல்கையில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தார்கள். இதற்கு முழு காரணமும் விஜய்தான் என அவருக்கு எதிர் தரப்பினர் குற்றஞ்சாட்டினார்கள்.

வெளியே வந்த விஜய்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சென்று சந்திக்காமல்; அவர்களை பனையூருக்கு வரவழைத்து சந்தித்து ஆறுதல் கூறி மன்னிப்பு கேட்டார். அப்படி செய்த பிறகு மீண்டும் ஈரோடு, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று மக்களை சந்தித்து பேசினார் விஜய். இருந்தாலும் முன்னர் போல் அவரிடம் இருந்த உற்சாகம் இல்லை என்பது அவருக்கு நெருங்கியவர்களின் கருத்தாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் விஜய்: இதற்கிடையே அரசியல் அறிவிப்பை வெளியிட்டபோதே இன்னும் ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்று கூறியிருந்தார். அதன்படி ஹெச்.வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இப்படமானது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று சொல்லப்படுகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகிறது. அப்படத்துக்கு போட்டியாக சிவகார்த்திகேயனின் பராசக்தி படம் 10ஆம் தேதி ரிலீஸாகிறது.
எஸ்.ஏ.சியின் ஆசை: இந்நிலையில் சிறை படத்தின் விழாவில் பேசிய இயக்குநரும், விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர், "இயக்குநர்கள் ஸ்ரீதர், பாலுமகேந்திராவுக்கு பிறகு எனக்கு பிடித்த இயக்குநர் வெற்றிமாறன். அவரது இயக்கத்தில் விஜய் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். விஜய்யும் ஆசைப்பட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். அது நடக்கவில்லை" என்றார். முன்னதாக விஜய்யின் கடைசி படத்தை வெற்றிமாறன்தான் இயக்குவார் என ஒரு தகவல் அப்போது வெளியானது நினைவுகூரத்தக்கது.


Click it and Unblock the Notifications











