விஜய்யின் ஜனநாயகன்.. எப்படிப்பட்ட படமாக இருக்கும் தெரியுமா?.. ஆஹா பட்டையை கிளப்பிடுவாரே தளபதி

சென்னை: அரசியல் பிரவேசம் செய்திருக்கு விஜய்; ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்திருக்கிறார். இதனால் இப்படத்தின் மீது அதீத எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது. கடைசி படம் என்பதால் கண்டிப்பாக விஜய்யின் கரியரில் மறக்க முடியாத படத்தை வினோத் தருவார் என்ற நம்பிக்கையும் கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் படம் படம் புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.

சினிமாவில் மும்முரமாக நடித்துவரும் விஜய்; அடுத்த சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் பஞ்சாயத்துக்கள் கிளம்பின. இந்த விவகாரத்தை வைத்து ரஜினி ரசிகர்களும் அவர் ரசிகர்களும் வெட்டிக்கொள்ளாத குறைதான். அந்த அளவுக்கு வாக்குவாதங்கள் கிளம்பின. இப்படிப்பட்ட நிலைமையில் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து அரசியல் பிரேவசம் செய்துவிட்டார் விஜய். அவர் அரசியலுக்கு வந்ததிலிருந்து தனக்கு சினிமாவில் இருக்கும் உச்சக்கட்ட மார்க்கெட்டை விட்டுவிட்டு மக்கள் நலனுக்காக வந்திருக்கிறார் என்று அவரது அபிமானிகள் சொல்கிறார்கள்.

கடைசி படம்: அரசியல் கட்சி தொடக்கம் பற்றிய அறிவிப்பை வெளியிட்டபோதே இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்பதையும் தெரிவித்திருந்தார். அந்தப் படத்தை ஹெச்.வினோத் இயக்க விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். அனிருத் இசையமைக்கிறார். தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி படத்தின் ரீமேக் என்று இது சொல்லப்பட்டாலும் அதுபற்றி உறுதியாக தெரியவில்லை.

Vijay s final film Jana nayagan packs 10 action sequences here are full details
Photo Credit:

அடுத்த வருடம் ரிலீஸ்: படத்தின் பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. அடுத்த வருடம் ஜனவரி மாதம் படம் ரிலீஸாகிறது. படத்தின் முதல் சிங்கிளும் இன்னும் சில வாரங்களில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனை விஜய்யே பாடியிருப்பதாகவும் ஒரு தகவல் வட்டமடித்துக்கொண்டிருக்கிறது. இது கடைசி படம் என்று கருதப்படுவதால் கண்டிப்பாக பெரிய சம்பவம் இதில் இருக்கும் எனவும் தளபதி ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.

அரசியல் படம்?: அதிலும் முக்கியமாக விஜய் இப்போது அரசியல் பிரவேசம் செய்திருப்பதால் இது அரசியல் ஜானரில்தான் உருவாகும் எனவும் பேச்சுக்கள் கிளம்பின. ஆனால் இது முழுக்க முழுக்க ஜனரஞ்சக படமாகவும், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் ஒரு படமாகவும் இருக்கும் என ஒரு மேடையில் இயக்குநர் வினோத் தெளிவுப்படுத்தியிருந்தார். இந்நிலையில் படம் பற்றி புதிய தகவல் ஒன்று ஓட ஆரம்பித்திருக்கிறது.

என்ன தகவல்?: அதாவது இது முழுக்க அரசியல் சார்ந்த படமாக இல்லாமல் நிறைய ஆக்‌ஷன் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் ஒரு படமாக இருக்குமாம். கிட்டத்தட்ட பத்து சண்டை காட்சிகள்வரை படத்தில் இருப்பதாகவும், வசனங்களில் அரசியல் டச் இருக்கும் என்றும் படக்குழுவுக்கு நெருக்கமான வட்டாரம் தெரிவித்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகள் என்றாலே விஜய்க்கு தனி எனர்ஜி வந்துவிடும். இதில் பத்து சண்டை காட்சிகள் இடம்பெற்றால் அவர் மாஸ் காண்பித்துவிடுவாரே என்று தளபதி ரசிகர்கள் துள்ளி குதிக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X