தோல்வி பட தயாரிப்பாளர் வந்தால் ஒளிந்துகொள்வார்.. அவரை நம்பாதீங்க.. விஜய் பற்றி முன்னாள் மேனேஜர் ஓபன் டாக்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டியது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் இன்னமும் ரிலீஸாகாமல் இருக்கிறது. இப்போது ரிவைசிங் கமிட்டிக்கு படம் சென்றாலும் எப்போது ரிலீஸாகும் என்பது உறுதியாக தெரியவில்லை. இந்நிலையில் விஜய் பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் கூறியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியிருக்கிறது.

அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய்க்கு ஜனநாயகன் படம்தான் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதனால் இப்படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் ரசிகர்கள். ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ஜனவரி மாதம் வெளியாகவிருந்த படம் ரிலீஸாகவில்லை. அதனையடுத்து இவ்விவகாரம் நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றம் சாதகமான தீர்ப்பு கொடுக்கும் என்று எதிர்பார்த்தால்; அதுவும் நடக்கவில்லை.

பட தயாரிப்பு நிறுவனத்தின் முடிவு: நீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்பு வர தாமதம் ஆகுமோ என அஞ்சிய கேவிஎன் நிறுவனம் வழக்கை வாபஸ் வாங்கிவிட்டது. வாபஸ் பெற்ற கையோடு மறு தணிக்கைக்கு படத்தை அனுப்பியிருக்கிறது. ஆனால் மறு தணிக்கைக்கான அதிகாரிகள் இன்னமும் படம் பார்க்கவில்லை என கூறப்படுகிறது. எனவே பிப்ரவரி மாதத்திலாவது படம் ரிலீஸாகுமா என்ற கேள்வியும் அவரது ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது.

Vijay s Former Manager P T Selvakumar Makes Shocking Allegations Amid Jana nayagan Release Delay
Photo Credit:

உறுதி எடுத்திருக்கும் ரசிகர்கள்: அவர் அரசியல் கட்சி ஆரம்பித்தபோதே ஜனநாயகன் படத்துக்கு கண்டிப்பாக தடங்கல் வரும் என்றுதான் எதிர்பார்த்தோம்; ஆனால் இவ்வளவு பெரிய தடங்கல் வரும் என நினைக்கவில்லை என்கிறார்கள் தளபதி ரசிகர்கள். இந்தப் படத்துக்கு எத்தனை தடங்கல்கள் வந்தாலும்; ஜனநாயகன் ரிலீஸாகும்போது பெரிய வெற்றி பெற வைப்போம் எனவும் சமூக ஊடகங்களில் உறுதி எடுக்கவும் செய்திருக்கிறார்கள் அவர்கள்.

பதிலடி கொடுக்கவும் திட்டம்: அதுமட்டுமின்றி இப்போது அவரை படுத்தும் அரசியல்வாதிகளுக்கு வரும் தேர்தலில் பதிலடி கொடுக்கவும் திட்டம் தீட்டியிருக்கிறார்கள். அதன் காரணமாக தேர்தல் பணிகளிலும் படு மும்முரமாக இறங்கியிருக்கிறார்கள். விஜய்யும் எப்படியாவது தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திட வேண்டும் எனவும் உழைத்துவருவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் சொல்கிறார்கள். இந்நிலையில் விஜய் பற்றி அவரது முன்னாள் மேனேஜர் பி.டி.செல்வக்குமார் பேசியிருக்கும் விஷயம் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

பி.டி.செல்வக்குமார் பேட்டி: அவர் சமீபத்தில் பேசுகையில், "விஜய் ஒரு துரோகி. செங்கோட்டையன் ஒரு ஊழல்வாதி. இளைஞர்கள் விஜய்யை நம்பி பணத்தை செலவு செய்ய வேண்டாம். தேர்தலில் தோற்றால் விஜய் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிடுவார். அவருக்கு தோல்வி பிடிக்காது. தோற்ற படத்தின் தயாரிப்பாளர் வந்தாலே வீட்டுக்குள் சேர்க்கமாட்டார். நான் இல்லை என சொல்லிவிடுங்கள் என கூறிவிட்டு ஒளிந்து நின்று பார்ப்பார்" என்றார். விஜய்யிடம் செல்வக்குமார் பல வருடங்கள் மேனேஜராக இருந்ததோடு மட்டுமின்றி புலி படத்தை தயாரிக்கவும் செய்தார். இப்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X