அரிது அரிது விஜய்யின் நண்பனாக பிறப்பது அரிது.. தூண்டில் போட்டு கவரும் மீன் வளத்துறை அமைச்சர் ஸ்ரீநாத்
சென்னை: தமிழ்நாடு முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றதை அடுத்து; அவரது அமைச்சரவையும் பதவியேற்றுக்கொண்டார். அந்தவகையில் விஜய்யின் நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத் மீன் வளத்துறை அமைச்சராகியிருக்கிறார். தனது பணிகளை செய்ய ஆரம்பித்திருக்கும் அவர்; கச்சத்தீவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு மழுப்பிவிட்டு சென்றார். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது இணையத்தில் ட்ரெண்டாகியிருக்கிறது.
விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி தனிப்பெரும் கட்சியாக மாறியது. அதனையடுத்து மாற்று கட்சி ஆதரவுடன் விஜய் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்தார். அவர் முதலமைச்சரான பிறகு யார் யார் அவரது அமைச்சரவையில் இடம்பெறுவார் என்ற கேள்வியும் எழுந்தது. இத்தனை வருடங்கள் பேச்சு வழக்கில் மட்டுமே இருந்த, ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதை நடைமுறைப்படுத்தியிருக்கிறார். விசிக, காங்கிரஸ் கட்சியினரும் அமைச்சரவையில் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இளம் அமைச்சர் படை: விஜய்யின் அமைச்சரவையில் வயதானவர்கள் என எடுத்துக்கொண்டால் புஸ்ஸி ஆனந்த், செங்கோட்டையன் உள்ளிட்ட சிலரே இருக்கிறார்கள். மற்றபடி பெரும்பாலானோர் இளைஞர்களாகவே இருக்கிறார்கள். அதிகாரத்துக்கு இளைஞர்கள் வந்தால் மாற்றம் நிகழும் என்ற சொற்றொடரும் காலங்காலமாக சொல்லப்பட்டது. இப்போதுதான் அதுவும் நடைமுறைக்கு வந்திருக்கிறது. அமைச்சரவையில் இருக்கும் இளைஞர் பட என்னவெல்லாம் செய்ய காத்திருக்கிறது என்பதை பார்க்க ஒட்டுமொத்த தமிழர்களும் ஆவலோடு இருக்கிறார்கள்.
விமர்சனங்களை சந்திக்கும் அமைச்சர்கள்: செங்கோட்டையனை தவிர்த்து பெரும்பாலானவர்கள் முதன்முறையாக அமைச்சராகியிருக்கிறார்கள். அவர்களது செயல்பாடு அதிகம் விமர்சனத்தையே சந்திக்கின்றன. தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கான அழைப்பை ரீல்ஸ் மூலம் விடுத்தது பெரிய அதிருப்தியை சம்பாதித்தது. அதேபோல் அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ் சில வாரங்களுக்கு முன்பு கோயில்களில் ஆய்வு நடத்தி தின் பண்டங்களின் தரம் குறித்து பேசினார். அது கிண்டலுக்கு ஆளானது. அடுத்ததாக திருச்செந்தூர் கோயிலுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.
நடவடிக்கை என்ன?: அப்போது அவரிடமே 4,000 ரூபாயை அர்ச்சகர்கள் லஞ்சமாக பெற்றார்கள். அதனையடுத்து அவர்களிடம் விளக்க கடிதம் பெற்றுக்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் பணம் பெற்ற அர்ச்சகர்கள் பணி நீக்கம் செய்யப்படவில்லை என்ற சர்ச்சையும் ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படி இளைஞர்களின் செயல்பாட்டில் சில தடுமாற்றங்கள் இருக்கின்றன. அதேசமயம் அவர்களுக்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும் என்பது தவெக ஆதரவாளர்களின் நிலைபாடு ஆகும்.
ஸ்ரீநாத் பேசியது: சூழல் இப்படி இருக்க விஜய்யின் நண்பரும், நடிகரும், மீன் வளத்துறை அமைச்சருமான ஸ்ரீநாத் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அதில் பேசியபோது, 'அரிது அரிது மானிடராய் பிறப்பது அரிது.. அதனினும் அரிது தளபதியின் நண்பனாய் பிறப்பது' என்று ஒரே போடாக போட்டார். ஏற்கனவே சில நாட்களுக்கு முன்பு அவரிடம் செய்தியாளர்கள், கச்சத்தீவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், 'நோ கமெண்ட்ஸ்' என சொல்லிவிட்டு சென்றார். இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸோ எந்த விஷயத்துக்கு பேச வேண்டுமோ அதை விட்டுவிட்டு மற்ற இடங்களில் எல்லாம் நன்றாக பேசுகிறார் என்று ட்ரோல் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications
