18 ஆண்டுகளை நிறைவு செய்த கில்லி... கில்லி பார்ட் 2 வெளியாகுமா... ரசிகர்கள் விருப்பம்

சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா நடிப்பில் வெளியான கில்லி படம் அவரது சினிமா கேரியரில் சிறப்பாக அமைந்தது. அந்தப் படம் எல்லா விஷயத்திலும் அவருக்கு ஏற்றத்தையும் ஏராளமான ரசிகர்களையும் தந்தது. இந்நிலையில் படம் வெளியாகி தற்போது 18 ஆண்டுகளை பூர்த்தி செய்துள்ளது.

 நடிகர் விஜய்யின் கில்லி

நடிகர் விஜய்யின் கில்லி

நடிகர் விஜய்யின் திரையுலக பயணத்தில் வெற்றிக்கல்லாக அமைந்த படம் கில்லி. கடந்த 2004ல் வெளியான இந்தப் படத்தை தரணி இயக்கியிருந்த நிலையில் வித்யாசாகர் இசையில் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஜய் அடுத்தக்கட்டத்திற்கு நகர இந்தப் படம் வெகுவாக துணை புரிந்தது.

மாஸ் ஹீரோ விஜய்

மாஸ் ஹீரோ விஜய்

விஜய் மாஸ் ஹீரோவாக காமெடி, சென்டிமெண்ட் உள்ளிட்ட அனைத்து அம்சங்களிலும் இந்தப் படத்தில் கலக்கியிருப்பார். போகிற போக்கில் அவர் செய்த காமெடி கலாட்டாக்கள் படத்தில் பேசப்பட்டது. மேலும் த்ரிஷாவின் அழகு மற்றும் கவர்ச்சியும் படத்தில் ரசிகர்களின் விருப்பத்திற்கு உள்ளானது.

வலிமையான வில்லன்

வலிமையான வில்லன்

ஒவ்வொரு படத்தின் வெற்றிக்கும் அந்தப் படத்தில் நடிக்கும் வில்லன் கேரக்டர் வலிமையாக அமைய வேண்டும். அந்த வகையில் சிறப்பான வில்லனா நடித்திருந்தார் பிரகாஷ்ராஜ். படத்தில் அவர் த்ரிஷாவை பார்த்து செல்லம் ஐ லவ் யூ என்று சொல்வது மிகவும் அழகாக காட்சிப் படுத்தப்பட்டிருக்கும்.

18 ஆண்டுகளை கடந்த கில்லி

18 ஆண்டுகளை கடந்த கில்லி

இந்தப் படம் அனைத்து வகையிலும் விஜய்க்கு சிறப்பாக அமைந்தது. படம் வெளியாகி 18 ஆண்டுகளை கடந்த நிலையிலும், தற்போது இந்தப் படத்தை பார்த்தால் நமக்கு கொண்டாட்டத்தையே ஏற்படுத்தும். இந்நிலையில் இது போன்ற ஒரு படம் விஜய்யின் சினிமா கேரியரில் மீண்டும் அமையுமா என்பது சந்தேகமே.

2வது பாகம் வெளியாகுமா?

2வது பாகம் வெளியாகுமா?

ஆனாலும் தற்போது 18 ஆண்டுகளை கடந்துள்ள இந்தப் படத்தின் அடுத்த பாகம் வெளியானால் சிறப்பாக அமையும் என்று விஜய் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். படத்தில் பாடல்கள், காட்சி அமைப்புகள், திரைக்கதை, காமெடி உள்ளிட்டவை தற்போது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ள நிலையில், இதை முன்னெடுப்பது சிறப்பாக அமையும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X