மீண்டும் ஒன்று கூடிய ‘கில்லி’ குடும்பம்.. விஜய்யின் ரீல் அப்பா, அம்மா என்னம்மா போஸ் கொடுக்கிறாங்க!
சென்னை: கில்லி படத்தில் விஜய்க்கு அம்மா மற்றும் அப்பாவாக நடித்த நடிகர்கள் பல ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒன்றிணைந்து எடுத்துக் கொண்ட புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், ஆஷிஷ் வித்யார்த்தி உள்ளிட்ட பலர் நடித்து கடந்த 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்தது.
தெலுங்கில் வெளியான 'ஒக்கடு' படத்தை விட கில்லி படத்தில் நடிகர் விஜய் தனது அதிரடி நடிப்பால் மிரட்டி எடுத்திருப்பார்.

கில்லி
இயக்குநர் தரணி இயக்கத்தில் 2004ம் ஆண்டு வெளியான கில்லி படம் இன்னமும் விஜய் ரசிகர்களின் ஃபேவரைட் படமாக மாஸ் காட்டி வருகிறது. காமெடி, ஆக்ஷன், காதல், பாடல்கள் மற்றும் ஸ்ட்ராங்கான கதை என அத்தனை அம்சமும் கில்லி படத்தில் நிறைந்திருக்கும். மகேஷ் பாபு, பூமிகா சாவ்லா நடிப்பில் 2003ம் ஆண்டு வெளியான ஒக்கடு படத்தை உடனடியாக ரீமேக் செய்து தமிழில் ஹிட் அடித்திருந்தார் விஜய்.

18 ஆண்டுகள்
ஏப்ரல் 17ம் தேதி 2004ம் ஆண்டு கில்லி திரைப்படம் வெளியான நிலையில், சமீபத்தில் 18 ஆண்டுகளை நிறைவு செய்திருந்தது கில்லி படம். விஜய் ரசிகர்கள் கில்லி படத்தின் 18 ஆண்டு கொண்டாட்டத்தை சமூக வலைதளங்கள் மற்றும் சிறப்பு காட்சியாக சில திரையரங்குகளில் கில்லி ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், கொண்டாடி தீர்த்தனர்.

மீண்டும் இணைந்த கில்லி குடும்பம்
இந்நிலையில், சமீபத்தில் கில்லி படத்தில் விஜய்யின் அப்பாவாக நடித்த நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் அம்மாவாக நடிகை ஜானகி சபேஷ் உள்ளிட்ட இருவரும் கடற்கரையில் சந்தித்துக் கொண்டபோது எடுத்த போட்டோக்களை ஷேர் செய்து டிரெண்டாக்கி உள்ளனர். அப்போ பார்த்தது போலவே இப்பவும் இருவரும் அப்படியே உள்ளனர் என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.

திறமையான நடிகர்கள்
ஆஷிஷ் வித்யார்த்தி இந்தியா முழுவதும் ஏகப்பட்ட படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளியான பிரவீன் தாம்பே படத்திலும் ஆஷிஷ் வித்யார்த்தி தான் கோச். அதே போல கேரளாவில் பிறந்து மார்க்கெட்டிங் துறையில் அசத்தி வரும் ஜானகி சபேஷ் தென்னிந்திய மொழி படங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார். இந்நிலையில், இருவரும் இணைந்து எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படங்கள் விஜய் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

மகனுக்கு வேலை கிடைச்சிடுச்சு
கில்லி படத்தில் அரியர் முடிக்காத வேலுவால் அப்செட்டாக இருந்த இருவரும் இப்போ மகன் 'ரா' ஏஜென்ட்டாக பீஸ்ட் படத்தில் மாறியதை எண்ணி ரொம்பவே ஹேப்பியா இருக்காங்க போல என மீம்களையும் போட்டு விஜய் ரசிகர்கள் தெறிக்க விட்டு வருகின்றனர். விஜய் மற்றும் அரிசி மூட்டை ஜெனிஃபர் மட்டும் தான் மிஸ்சிங். அவர்களும் சீக்கிரமே இணைந்து ஒரு ஃபேமிலி போட்டோ மாதிரி போஸ் கொடுத்தால் சூப்பராக இருக்கும் என ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











