அனுமதியின்றி வெடிப்பொருட்கள் பயன்பாடு.. ’கோட்’ படப்பிடிப்புக்கு ஆப்பு அடித்த புதுச்சேரி கலெக்டர்!

சென்னை: வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் கோட் படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. அனுமதியின்றி வெடிபொருட்களை வைத்து படப்பிடிப்பு நடத்திய நிலையில் பிரச்சனை வெடித்துள்ளதாக கூறுகின்றனர்.

தளபதி விஜய்யின் 68 வது படமான தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. ஹாலிவுட் படங்களுக்கு நிகரான ஆக்ஷன் காட்சிகளுடன் டீஏஜிங், ஏஐ உள்ளிட்ட தொழில்நுட்பங்களுடன் இந்த படம் உருவாகி வருகிறது.

Vijay s GOAT team face trouble after Puducherry Collector issues notice

மாநாடு படத்தை விட மிரட்டலான மேக்கிங்கை விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கி வருவதாக கூறுகின்றனர். இந்நிலையில், அனுமதி வாங்காமல் வெடி பொருட்களுடன் நடந்த படப்பிடிப்புக்காக கோட் படக்குழுவினர் பிரச்சனையை சந்தித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய் போர்ஷன் ஓவர்: கோட் படத்தின் படப்பிடிப்பை நடிகர் விஜய் கடந்த சில தினங்களுக்கு முன்பாகவே முடித்து விட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் ஜெயராம் நடிக்கும் காட்சிகள் தற்போது பாண்டிச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக படமாக்கப்பட்டு வந்த நிலையில், அனுமதி இல்லாமல் பிடிப்பு நடத்தியதாக தற்போது சர்ச்சை கிளம்பியுள்ளது.

புதுச்சேரியில் படப்பிடிப்பு: புதுச்சேரியின் பல்வேறு இடங்களில் கோட் படத்தின் இறுதிக் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன. கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் நடைபெற்ற அதிரடி ஆக்ஷன் சேஸிங் காட்சிகளில் சில வெடிபொருட்களும் பயன்படுத்தப்பட்டது பகீரை கிளப்பியுள்ளது.

அனுமதி பெறாமல்?: கோட் படத்தின் படப்பிடிப்பு நடத்த அனுமதி பெற்ற நிலையில், அந்த படப்பிடிப்பின் போது சாலைகளில் வெடிபொருட்களை பயன்படுத்துவது குறித்து அறிவிக்கவில்லை என தற்போது புகார் எழுந்துள்ளது. அது தொடர்பாக படக்குழுவினரும் விளக்கம் கேட்டு புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் நோட்டீஸ் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் உள்ள ஏஎஃப்டி மில், பீச் ரோடு, பழைய துறைமுகம், ஈசிஆரில் சிவாஜி சிலைக்கு அருகே என பல்வேறு இடங்களில் வெடிப் பொருட்களை பயன்படுத்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக கூறுகின்றனர்.

முதலமைச்சருடன் சந்திப்பு: புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உடன் நடிகர் விஜய் ஏற்கனவே சந்திப்பு நடத்தி பேசிய காட்சிகள் வெளியாகின. புஸ்ஸி ஆனந்தும் புதுச்சேரியில் அரசியல் நடத்தி வந்த நிலையில், கோட் படக்குழுவின் இந்த பிரச்சனையை சுமூகமாக முடித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி திட்டமிட்டபடி கோட் திரைப்படம் வெளியாகும் எனக் கூறுகின்றனர். இதுவரை இல்லாத அளவுக்கு ஆக்சன் காட்சிகள் இந்தப் படத்தில் மாஸ் காட்டும் என கூறுகின்றனர்.

உலக பட்டினி தினம்: தவெக தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் நேற்று அனுசரிக்கப்பட்ட உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தவெக நிர்வாகிகள் பல இடங்களில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை நடத்தினர். நடிகர் விஜய்யின் பிறந்தநாள் ஜூன் மாதம் கொண்டாடப்பட உள்ள நிலையில், அந்த மாதம் முழுவதும் பல நலத்திட்ட நிகழ்ச்சிகளையும் மாணவர்களுக்கு பரிசு வழங்கும் விழாவும் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. கோட் படத்தில் நடிகர் விஜய் 'விசில் போடு' பாடல் மட்டுமின்றி ரசிகர்களுக்காக இன்னொரு பாடலையும் பாடியுள்ளார் என யுவன் சங்கர் ராஜா கூறியுள்ளார். தளபதி 69 படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் பேச்சுக்கள் அடிபடத் தொடங்கியுள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X