வாக்குச்சாவடியில் குட்டி ரசிகையை பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த விஜய்: வீடியோ இதோ
Recommended Video
சென்னை: வாக்களிக்க சென்ற இடத்தில் விஜய் சிறுமி ஒருவரை அவரின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்த வீடியோ வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று லோக்சபா மற்றும் இடைத்தேர்தல் நடந்தது. நடிகர் விஜய் தென் சென்னை லோக்சபா தொகுதியில் உள்ள சாலிகிராமத்தில் காலையிலேயே வாக்களித்தார்.

அவர் மக்களுடன் மக்களாக வரிசையில் காத்திருந்து தான் ஓட்டு போட்டார். விஜய் வெயிலில் வரிசையில் பொறுமையாக நின்றபோது எடுக்கப்பட்ட புகைப்படங்ளும், வீடியோக்களும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் விஜய்யை பார்த்த சிறுமி ஒருவர் அவருடன் செல்ஃபி எடுக்க வர கூட்டத்தில் பெற்றோரை பிரிந்துவிட்டார். இதையடுத்து விஜய் அந்த சிறுமியை அவரின் பெற்றோரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார்.
எங்க உங்க அம்மா, அப்பா என்று கூறி விஜய் அந்த சிறுமியை அழைத்துச் செல்லும் வீடியோ வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வீடியோவை பார்த்த ரசிகர்கள் தளபதி, தளபதி தான் என்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











