மெர்சல் டீமுக்கு மெகா பார்ட்டி கொடுத்த விஜய்!

By Shankar

சென்னை: மெர்சல் படம் பெரும் வெற்றிப் பெற்றதைக் கொண்டாடும் வகையில் அதில் பணியாற்றிய அனைவருக்கும் தனது வீட்டில் பெரிய விருந்து கொடுத்துள்ளார் நடிகர் விஜய்.

தீபாவளிக்கு வெளியானது மெர்சல் படம். சாதாரண படமாக பார்க்கப்பட்ட மெர்சலை அசாதாரண படமாக மாற்றினர் பாஜகவின் தமிழிசை சௌந்தர்ராஜனும் எச் ராஜாவும்.

தாறு மாறு வசூல்

தாறு மாறு வசூல்

உள்ளூர், வெளியூர், வெளிநாடு என திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வசூலைப் பெற்றுள்ளது மெர்சல். ரஜினிகாந்த் படத்துக்கு இணையாக மெர்சலுக்கு வசூல் குவிந்துவிட்டது.

விஜய் மகிழ்ச்சி

விஜய் மகிழ்ச்சி

ஏற்கெனவே பைரவா சுமாராகப் போனதில் கொஞ்சம் அப்செட்டிலிருந்த விஜய்க்கு இந்த வெற்றி மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. பொதுமக்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கடிதம் எழுதினார்.

பெரும் விருந்து

பெரும் விருந்து

மெர்சல் படத்தில் பணியாற்றிய நடிகர்கள், தொழில் நுட்பக் கலைஞர்களுக்கு தனது கிழக்கு கடற்கரைச் சாலை வீட்டில் ஒரு விருந்து அளிக்க அழைப்பு விடுத்திருந்தார். இதைத் தொடர்ந்து படக்குழுவினர் விஜய் வீட்டில் குழுமினர். அவர்களுக்கு பிரமாண்ட விருந்தினை அளித்தார் விஜய்.

விஜய்யின் முதல் படம்

விஜய்யின் முதல் படம்

விஜய்யின் திரையுலக வாழ்க்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு ரூ 200 கோடியை உலக அளவில் வசூலித்துள்ளது மெர்சல். அடுத்து தெலுங்கில் அதிரிந்தி என்ற பெயரில் விரைவில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X