விஜய்யை பேட்டி எடுக்கும் நெல்சன் திலீப்குமார்... காமெடி கலாட்டாவுக்கு தயாராகலாம்!

சென்னை : நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ளது பீஸ்ட் படம். இந்தப் படம் வரும் 13ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ள நிலையில், படத்திற்கான பிரமோஷனை சன் பிக்சர்ஸ் துவங்கியுள்ளது. நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் பீஸ்ட் படம்

விஜய்யின் பீஸ்ட் படம்

நடிகர் விஜய், பூஜா ஹெக்டே உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் பீஸ்ட். மாஸ்டர் படத்திற்கு பிறகு வெளியாகவுள்ள இந்தப் படத்திற்கு விஜய் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி தாறுமாறு வரவேற்பை பெற்றுள்ளது.

ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 13ம் தேதி ரிலீஸ்

படம் வரும் 13ம் தேதி தமிழ் புத்தாண்டு கொண்டாட்டமாக திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா படமாக படம் ரிலீசாக உள்ள நிலையில், படத்தின் ப்ரமோஷனை தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் முடுக்கி விட்டுள்ளது. நாளைய தினம் படத்தின் ட்ரெயிலர் வெளியாக உள்ளது.

ரத்து செய்யப்பட்ட இசை வெளியீடு

ரத்து செய்யப்பட்ட இசை வெளியீடு

படத்தின் இரு பாடல்கள் வெளியான நிலையில், இசை வெளியீட்டிற்கு முன்னதாக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் அந்த நிகழ்வு ரத்து செய்யப்பட்டது. இதனிடையே படத்தின் வெளியீட்டிற்கு இன்னும் இரு வாரங்கள் கூட இல்லாத நிலையில், இசை வெளியீடு நடக்காது என்றே கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

ரசிகர்கள் ஏமாற்றம்

ரசிகர்கள் ஏமாற்றம்

விஜய் படங்களின் இசை வெளியீடு எப்போதுமே பிரம்மாண்டமாக நடத்தப்படும். அந்த நிகழ்வில் விஜய் எப்போதும் சிறப்பான பேச்சை வெளிப்படுத்துவார். இந்நிலையில் தற்போது பீஸ்ட் படத்தின் இசை வெளியீடு ரத்து செய்யப்பட்டுள்ளது கேள்விகளை எழுப்பியுள்ளது.

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு பேட்டி

இதனிடையே, நீண்ட காலங்களுக்கு பிறகு படத்தின் பிரமோஷனுக்காக நடிகர் விஜய் இன்டர்வியூ கொடுக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சன் டிவியில் இந்த இன்டர்வியூ வரும் 10ம் தேதி ஒளிபரப்பாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த இன்டர்வியூவில் அனிருத் உள்ளிட்டவர்களும் பங்கேற்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

பேட்டியெடுக்கும் நெல்சன்

பேட்டியெடுக்கும் நெல்சன்

நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு விஜய் இன்டர்வியூவில் பங்கேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது அவரது ரசிகர்களை மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இதில் கூடுதல் சிறப்பாக படத்தின் இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இந்த இன்டர்வியூவை எடுக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நகைச்சுவை உணர்வுகொண்ட நெல்சன்

நகைச்சுவை உணர்வுகொண்ட நெல்சன்

இயல்பாகவே மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர் நெல்சன். பாடல்களுக்கு முந்தைய பிரமோஷன்களில் அவரது நகைச்சுவை வெளிப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்யை நெல்சன் பேட்டியெடுக்கவுள்ளது கண்டிப்பாக சிறப்பாகவே அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X