செம மாஸா இல்ல இருக்கு.. இதுதான் 'மாஸ்டர்' படத்தின் பரபரக்கும் ஓபனிங் காட்சி.. நடிகர் தகவல்!

By

சென்னை: மாஸ்டர் படத்தின் ஓபனிங் காட்சி பற்றி படத்தில் நடித்துள்ள நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Recommended Video

Jyothika ok...Ramya Krishnan எப்படி ? | Dubbing artist Keerthika | Filmibeat tamil

கைதி ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லன். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் பட ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியராக

பேராசிரியராக

படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. இதில் முதன்முறையாக பேராசிரியராக நடிக்கிறார் நடிகர் விஜய். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறி வருகின்றனர். தியேட்டர் எப்போது திறக்கப்படுமோ, அப்போது இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

கல்லூரி நண்பர்கள்

கல்லூரி நண்பர்கள்

இந்நிலையில் இந்தப் படம் பற்றி அவ்வப்போது புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கடந்த சில நாட்களுக்கு முன், படத்தின் ஆக்‌ஷன் காட்சிகள் பற்றி கூறியிருந்தார். இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்யின் ஓபனிங் காட்சி பற்றி, படத்தில் நடித்துள்ள சஞ்சீவ் தெரிவித்துள்ளார். கல்லூரி நண்பர்கள் அனைவரும் ஒன்று கூடுவதுபோல ஆரம்பக் காட்சி இருக்கும். அப்போது விஜய் என்ட்ரி ஆவார் என்று தெரிவித்துள்ளார்.

ஓபனிங் பாடல்

ஓபனிங் பாடல்

அதனால் வாத்தி கம்மிங்தான் படத்தின் ஓபனிங் பாடல் என்று தெரிகிறது. இதனால் ரசிகர்கள் குஷியில் உள்ளனர். கொரோனா காரணமாக தியேட்டர்கள் திறக்கப்படவில்லை என்பதால், ஓடிடி-யில் படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். சூரரைப் போற்று படம் ஓடிடி யில் வெளியாக இருக்கிறது. ஆனால், மாஸ்டர் படம் தியேட்டரில்தான் வெளியாகும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X