நீ ஜூலி இல்லை ஒரு ரூபாய் கூலி.. விஜய்க்கு எதிரான பேச்சு.. அடிச்சு துவைக்கும் தளபதி ரசிகர்கள்!
சென்னை: நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் நேற்று வேலூர் மாவட்டம் அகரம்சேரியில் வைத்து தன் கட்சி நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு காளை தொடர்பான குட்டி ஸ்டோரியை சொன்னார். அதை வைத்து பிக்பாஸ் ஜூலி கடுமையாக விஜய்யை விமர்சித்திருந்தார். அதை பார்த்து கொந்தளித்த தளபதி ரசிகர்கள் இப்போது ஜூலியை அடித்து துவைக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.
தமிழக வெற்றிக் கழகத்தை ஆரம்பித்திருக்கும் விஜய் நேற்று வேலூருக்கு சென்று நிர்வாகிகளையும், தொண்டர்களையும் சந்தித்தார். அப்போது தனது பேச்சை ஒரு குட்டி ஸ்டோரியை வைத்து தொடங்கினார். அவர், "ஒரு ஊரில் யாருக்கும் அடங்காத ஜல்லிக்கட்டு காலை இருந்தது. அந்தக் காளை சீறிக்கொண்டு, தனது காலால் மண்ணை வாரி இரைத்துக்கொண்டிருந்தது. அந்தக் காளையை யாராலும் அடக்க முடியவில்லை. வெறுமனே வேடிக்கை மட்டும் பார்த்திருந்தார்கள்.

சின்ன பையன் ஒருவன்: அந்தக் காளையை நாங்கள் ஏற்கனவே அடக்கியிருக்கிறோம் நாங்கள் அனுபவசாலிகள் என சொல்லிக்கொண்டு சிலர் அடக்க சென்றார்கள். ஆனால் அந்தக் காளை அவர்களையும் முட்டிவிடுகிறது. இதனால் ஒரே குழப்பம். என்ன செய்வதென்று எல்லோரும் யோசித்தபோது அவர்களை விலக்கிக்கொண்டு ஒரு சிறுவன் தனது இரண்டு பாக்கெட்டுகளில் கைகளை விட்டுக்கொண்டு காளையை நோக்கி சென்றான். அவனைப் பார்த்து ஏற்கனவே முட்டு வாங்கியவர்கள், 'தம்பி அனுபவசாலிகளான எங்களாலேயே முடியவில்லை. நீ போய் செத்துவிடாதே என சொன்னார்கள். ஆனாலும் அந்த சிறுவன் காளையை நோக்கி சென்றான். தனது பாக்கெட்டில் இருந்து புல்லுக்கட்டை நீட்டினான். உடனே அந்தக் காளையும் புல்லை சாப்பிட தொடங்கிவிட்டது. சிறுவன் அந்தக் காளையை தடவிக்கொடுத்து வயலுக்கு அழைத்து சென்றான்" என கூறியிருந்தார்.
அட்டாக் செய்த ஜூலி: அவரது இந்தக் குட்டி ஸ்டோரியை கேட்டுவிட்டு கடுப்பான பிக்பாஸ் ஜூலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், "வணக்கம் விஜய் அண்ணே. இப்போதான் உங்கள் பரப்புரை பார்த்தேன். வழக்கம்போல் இதிலும் ஒன்றும் இல்லை. ஜல்லிக்கட்டு காளை பற்றி ஒரு குட்டி கதை சொன்னதை கேட்டுவிட்டு அதற்கு பதிலளிக்காமல் இருக்க முடியவில்லை.
பாதி பேர் மைனர்: நீங்கள் போகிற போக்கில் ஜல்லிக்கட்டு காளை குறித்து குட்டி கதையை சொல்லிவிட்டீர்கள். உங்கள் கட்சியில் இருப்பவர்களில் பல பேர் மைனர்கள். அவர்களும் ஜல்லிக்கட்டு காளைக்கு புல்லுக்கட்டை காட்டுகிறேன் என சொல்லி அதே மாதிரி செய்தால் ஒன்னு கிடக்க ஒன்னு ஆகிடப்போகுது அண்ணே. அப்படி நடந்தால் என்ன அண்ணே செய்வது. இதுவரை உயிரிழந்தவர்கள் 50ஆகாவே இருக்கட்டும் அண்ணே. அதை 500ஆக மாத்திடாதீங்க" என விளாசியிருந்தார். அந்த வீடியோ சோஷியல் மீடியாவில் சென்சேஷனல் ஆனது.
தளபதி ரசிகர்களின் பதிலடி: இந்நிலையில் ஜூலிக்கு விஜய்யின் ரசிகர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். ஒரு ரசிகர் வெளியிட்டிருக்கும் வீடியோவில், "நீங்கள் ஜல்லிக்கட்டில் போராடியவர்தான் ஒத்துக்கொள்கிறோம். ஜல்லிக்கட்டு என்று யாராவது ஒரு பேச்சு எடுத்தால் போதும் உடனே சூனியம் வைக்கிற ஜண்டா பொம்மை மாதிரி அடிக்கடி வந்துவிடுகிறீர்கள். நீங்கள் ஜூலி இல்லை. ஒரு ரூபாய் கூலி.
அதாவது அந்த மனுஷன் அரசியல் ரீதியாக ஜல்லிக்கட்டு காளையை உதாரணமாக சொல்லும்போது; அதை உதாரணமாக மட்டும் எடுத்துக்கொண்டு விட்டுவிடவேண்டும். உடனே ஜல்லிக்கட்டில் நான் போராடிய வீர மங்கை என சொல்லிக்கொண்டு ஆட்டோ ஏறி வந்து அடி வாங்கக்கூடாது. வீர மங்கை என நினைத்து பேசியதால் உங்களை வீங்க வீங்க அடிக்கப்போறானுங்க" என கூறியிருக்கிறார்.
ரசிகையின் பதிலடி: அதேபோல் இன்னொரு ரசிகை ஒருவர், "பித்தலாட்டக்காரி ஜூலி. விஜய் அண்ணா வேலூரில் பேசியதை வைத்து பேசியிருக்கிறார் ஜூலி. ஏதாவது தெளிவாக பேசியிருக்கிறாரா? கட்சியில் இருப்பவர்கள் பாதி பேர் மைனரா இல்லை மேஜரா என்பது தேர்தலில் தெரியவரும். நீங்கள் ஏன் இப்போது கதறுகிறீர்கள். ஒழுக்கமாக வார்த்தையை விடுங்கள். பிக்பாஸிலேயே உங்களுக்கு பித்தலாட்டக்காரி என பெயர் வைத்தாயிற்று. அங்க சுத்தி இங்க சுத்தி இப்போது விஜய் அண்ணாவிடம் வந்துவிட்டீர்களா? அவர் கால் தூசிக்கு வருவீர்களா?" என கேள்வி எழுப்பியிருக்கிறார்.


Click it and Unblock the Notifications