Jana Nayagan: ஜன நாயகனுக்கு பச்சைக்கொடி.. சென்சார் பிரச்னை ஓவர்.. தளபதி திருவிழா இம்முறை மிஸ்ஸே ஆகாது
சென்னை: நடிகரும் தவெக தலைவருமான விஜய் நடிப்பில் உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் கடந்த ஜனவரி மாதம் 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழு தெரிவித்தது. ஆனால் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைக்காத காரணத்தால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதேபோல் படத்தில் இந்திய ராணுவத்தின் இலச்சினைகள் காட்டப்பட்டுள்ளதால், அதற்கு உரிய முறையில் அனுமதி வாங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. இப்படி இருக்கையில் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைப்பதில் இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது அந்த இழுபறிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அதாவது படத்தை சென்சார் ரிவைசிங் கமிட்டி பார்த்துவிட்டது. இனி ரிவைசிங் கமிட்டி தரப்பில் படத்தில் செய்ய வேண்டிய மாறுதல்கள் இருந்தால் குறிப்பிடுவார்கள், இல்லை என்றால் படத்திற்கு சான்றிதழ் வழங்கிவிடுவார்கள் என்று கூறப்படுகிறது. இந்த தகவல் விஜய் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னும் சொல்லப்போனால் படத்திற்கு என்ன சான்றிதழ் கொடுத்தாலும் அதாவது யு, ஏ, யு / ஏ என எந்த சான்றிதழ் கொடுத்தாலும் படம் வெளியாவது உறுதி ஆகிவிட்டது.

ரிலீஸ் தேதி: அப்படி இருக்கும்போது இனி படத்தின் ரிலீஸ் தேதி எப்படியும் மே மாதத்தின் இரண்டாவது வாரம் அல்லது மூன்றாவது வாரமாக இருக்க அதிக வாய்ப்புகள் உள்ளது. அப்படி இருக்கையில் மே 4ஆம் தேதி தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வரவுள்ளதால், தவெகவினர் மற்றும் விஜய் ரசிகர்கள் உள்ளிட்ட பலரும் விஜய்க்கு சட்டமன்ற தேர்தலில் பெரிய வெற்றியை பரிசாக கொடுக்க தயாராகிவிட்டனர் என்றே கூறலாம்.
மகிழ்ச்சி: மொத்தத்தில் ஜன நாயகன் படத்திற்கான பிரச்னை முடிந்துவிட்டதால் படக்குழு நிம்மதியாக உள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் படத்தின் ரிலீஸ் தேதி முடிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் ஒரு பேச்சு ஓடிக் கொண்டு உள்ளது. அதே நேரத்தில் கால தாமதம் ஆனதும் ஆகிவிட்டது, படத்தை தளபதியின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியிட்டால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தும் வருகிறார்கள். மொத்தத்தில் ஜனநாயகன் படத்திற்கு இருந்த தடங்கல்கள் மொத்தமாக நீங்கிவிட்டது என்று படக்குழு மற்றும் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications











