Thalapathy Kacheri - ஜனநாயகன் முதல் சிங்கிள் பட்டையை கிளப்புது.. தளபதி கச்சேரி ஆரம்பம்

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸாகிறது. இதுதான் அவரது கடைசி படமாக இருக்கும் என்று கருதப்படுவதால் மிகப்பெரிய ஆவலை படம் மீது வைத்திருக்கிறார்கள் ரசிகர்கள். இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் பாடல் ரிலீஸாகி வரவேற்பை பெற்றிருக்கிறது.

விஜய் கடைசியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்திருந்தார். அந்தப் படம் தோல்வியைத்தான் சந்தித்தது. அப்படத்தின்போதே தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கி அரசியல் பிரவேசமும் செய்துவிட்டார். மேலும் இன்னும் ஒரு படத்தில்தான் நடிப்பேன் என்று அந்த அறிவிப்போடு இன்னொரு ஷாக் செய்தியை தெரிவித்திருந்தார். இதனால் அவரது கடைசி படத்தை யார் இயக்குவார் என்ற கேள்வி எழுந்திருந்தது.

ஜனநாயகன் விஜய்: பல பெயர்கள் அடிபட்ட சூழலில் கடைசியாக ஹெச்.வினோத் இயக்குநராக ஃபைனல் செய்யப்பட்டார். படத்துக்கு ஜனநாயகன் என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க; வில்லனாக பாபி தியோல் நடித்திருக்கிறார். மேலும் மமிதா பைஜு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கேவிஎன் நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார்.

Vijay s Jana Nayagan First Single Thalapathy Kacheri Out Now Fans Celebrate Actor s Final Film Before Politics
Photo Credit:

படம் எப்படி இருக்கும்: விஜய் இப்போது அரசியல் களத்தில் பம்பரமாக சுழன்றுவருவதால் இப்படம் அரசியல் ஜானரில் இருக்கும் என்ரு முன்பு கணிக்கப்பட்டிருந்தது. ஆனால் அப்படியெல்லாம் எதுவும் இல்லை; அனைத்து தரப்பினரும் படத்தை ரசிக்குபடிதான் இருக்கும் என வினோத் கூறிவிட்டார். அதேசமயம் இது பகவந்த் கேசரி படத்தின் ரீமேக்தான் என்றும் சொல்லப்பட்டது. இது உண்மையிலேயே அந்தப் படத்தின் ரீமேக்தானா இல்லை புதிய கதையா என்பது படம் பார்க்கும்போதுதான் தெரியும்.

அடுத்த வருடம் ரிலீஸ்: கடைசி படம் இது என கருதப்படுவதால் வானளவு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது ஜனநாயகன். அடுத்த வருடம் ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் வியாபாரம் எல்லாம் இப்போதே சூடு பிடிக்க ஆரம்பித்துவிட்டன. சூழல் இப்படி இருக்க இன்று படத்தின் முதல் சிங்கிள் ரிலீஸாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. ரசிகர்களும் ரொம்பவே ஆவலோடு இருந்தார்கள்.

பட்டையை கிளப்பும் ஃபர்ஸ்ட் சிங்கிள்: அறிவித்தபடி இன்று ஜனநாயகன் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸாகியிருக்கிறது. தளபதி கச்சேரி என்ற பாடலை விஜய்யும், அனிருத்தும் சேர்ந்து பாடியிருக்கிறார்கள். பாடலை தெருக்குரல் அறிவு எழுதியிருக்கிறார். பாடல் வரிகள் அனைத்தும் விஜய்யின் அரசியல் பிரவேசத்தை மறைமுகமாக குறிப்பிடும்வகையிலும், கொண்டாடும்வகையிலும் அமைந்திருக்கின்றன. இந்தப் பாடல் சோஷியல் மீடியாவில் இப்போது சென்சேஷனல் ஆகியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X