ஜனநாயகன் பட பிரச்னை.. உதயநிதி காரணமா?.. லீக்கானது பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடுத்த ரியாக்ஷன்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இணையத்தில் கசிந்து பெரிய அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது. ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. விஜய்யோ அமைதியாக இருக்கிறார். அதேசமயம் அவரது கட்சியை சேர்ந்த ஆதவ் அர்ஜுனா, 'இந்தப் படம் ரிலீஸ் ஆகாததற்கு எல். முருகனும், உதயநிதியும்தான் காரணம்' என கூறியிருக்கிறார். இந்நிலையில் இந்தப் பிரச்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல்முறையாக ரியாக்ஷன் கொடுத்திருக்கிறார்.

விஜய்யின் கடைசி படம் என்று சொல்லப்பட்டிருப்பது ஜனநாயகன். அந்தப் படத்தை பகவந்த் கேசரி ரீமேக்காக ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். ஜனவரி மாதமே ரிலீஸாக வேண்டிய படம் சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதால் ரிலீஸாகவில்லை. அதனையடுத்து வழக்கு போட்டு பிறகு வாபஸ் வாங்கி; மறு தணிக்கை அனுப்பியது. சூழல் இப்படி இருக்க சில நாட்களுக்கு முன்பு முழு படமும் இணையத்தில் கசிந்தது. அந்த ப்ரிண்ட்டில் EDI_REF என்று குறிப்பிடப்பட்டிருந்தது இன்னும் அதிர்ச்சியை உருவாக்கியது.

Vijay s Jana nayagan Leak MK Stalin Responds to Claims Involving Udhayanidhi
Photo Credit:

யார் காரணம்?: எடிட்டருக்கான காப்பி மொத்தமே நான்கு பேரிடம்தான் இருக்கும். ஹீரோ, தயாரிப்பாளர், இயக்குநர், எடிட்டர். இப்படி இருக்கையில் எடிட்டர் வாட்டர் மார்க்கோடு படம் கசிந்திருக்கிறது என்றால்; அந்த நான்கு பேரிலிருந்து ஒருவர்தான் லீக் செய்திருக்க வேண்டும் என தியரியையும் ஒருதரப்பினர் சொல்ல தொடங்கியிருக்கிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் வாய்ப்பே இல்லை இது சென்சார் தரப்பிலிருந்து லீக்காகியிருக்கும் என தவெகவினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இப்படி மாறி மாறி புகார்கள் வருகின்றன.

Also Read
நைட் 2 மணிக்கு பவழ மல்லி கயாடு லோஹருக்கு வந்த ஃபோன்.. நீங்கள்தான் வேண்டுமென கேட்ட சாய் அபயங்கர்
நைட் 2 மணிக்கு பவழ மல்லி கயாடு லோஹருக்கு வந்த ஃபோன்.. நீங்கள்தான் வேண்டுமென கேட்ட சாய் அபயங்கர்

திரையுலகம் கண்டனம்: ஜனநாயகன் லீக்கானதற்கு ஒட்டுமொத்த திரையுலகமும் சேர்ந்து கண்டித்திருக்கிறது. அதேசமயம் விஜய் ஒரு வார்த்தை கூட பேசாமல் மௌனம் காக்கிறார். இது ஒருபக்கம் இருக்க விஜய்யின் வலது கரமாக இப்போது இருக்கும் ஆதவ் அர்ஜுனா, 'ஜனநாயகன் படம் ரிலீஸ் ஆகாததற்கு எல். முருகனும், உதயநிதியும்தான் காரணம். இந்தப் படத்தை வெளியிட்டு விஜய்யை மிரட்டுகிறார்கள். அவர் இதற்கெல்லாம் பயப்படமாட்டார்' என்று ஒரே போடாக போட்டார். வழக்கம்போல் இதிலும் உதயநிதியை இழுக்கிறாரே என உடன் பிறப்புகள் கொதித்தார்கள்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரியாக்ஷன்: இந்நிலையில் இன்று காலை ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நடைபயிற்சியின்போது வாக்கு சேகரித்தார் முதலமைச்சர். அப்போது செய்தியாளர்கள் அவரிடம், ஜனநாயகன் படம் ஆன்லைனில் லீக்காகியிருக்கிறது அதை எப்படி பார்க்கிறீர்கள் என கேட்க, 'இதை பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்றார். அதனையடுத்து, ஜனநாயகன் ரிலீஸ் ஆகாததற்கு உதயநிதிதான் காரணம் என ஆதவ் அர்ஜுனா சொல்லியிருக்கிறார் என்று கேட்க, 'அப்படியா?.. எனக்கு தெரியாது. ஆதவ் அர்ஜுனா செய்தியை எல்லாம் நான் படிப்பது இல்லை' என்று குறிப்பிட்டார்.

முதல்முறை: ஜனநாயகன் பட பிரச்னை ஆரம்பித்ததிலிருந்தே விஜய் ரசிகர்களும், தொண்டர்களும்; ஏன் விஜய்யே கூட திமுகவைதான் காரணம் காட்டினார்கள். மேலும் அனைத்து விஷயங்களிலும் முதலமைச்சரை விஜய் விமர்சித்தாலும்; அதற்கு மு.க.ஸ்டாலின் எந்த ரியாக்ஷனும் கொடுத்ததில்லை. இப்போதுதான் விஜய் தொடர்பான விஷயத்தில் முதல்முறையாக நேரடியாக ரியாக்ஷன் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X