விஜய், ஹெச்.வினோத் அமைதியில் சந்தேகம்.. அவர்தான் குற்றவாளி.. ஜனநாயகன் லீக்.. அமீர் கிளப்பிய பகீர்

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் திரைப்படம் சில நாட்களுக்கு முன்பு இணையத்தில் கசிந்து பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது. அதை செய்தவர் யார் என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜுனாவோ, படத்தை ஒன்றிய அமைச்சர் எல்.முருகனும், உதயநிதியும்தான் முடக்கினார்கள். இணையத்தில் லீக் செய்து விஜய்யை மிரட்டுகிறார்கள் என்றெல்லாம் கூறினார். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் கூறியிருக்கும் விஷயம் அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.

விஜய்யும், ஹெச்.வினோத்தும் இணைந்த ஜனநாயகன் திரைப்படம் சென்சார் அதிகாரிகள் முட்டுக்கட்டை போட்டதால் ஜனவரி மாதம் ரிலீஸாகவில்லை. அதனையடுத்து நீதிமன்றத்துக்கும் சென்று பார்த்தது பட தயாரிப்பு நிறுவனம். ஆனால் எதுவும் நடக்கவில்லை. இதனையடுத்து வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறு தணிக்கைக்கு அனுப்பியது. ஆனால் படத்தை அவர்கள் இதுவரை பார்த்தார்களா இல்லையா என்பது உறுதியாக தெரியவில்லை. பெரும்பாலான தகவல்களில் அவர்கள் பார்த்துவிட்டதாகவும்; மே பத்தாம் தேதிக்குள் படம் ரிலீஸாகிவிடும் என்றும் சொல்லப்பட்டது.

Vijay s Jana nayagan Leaked Online Before Release Ameer Raises Questions
Photo Credit:

ஒட்டுமொத்த திரையுலகத்துக்கும் அதிர்ச்சி: ஆனால் ஒட்டுமொத்த இந்திய திரையுலகத்துக்கே அதிர்ச்சி தரும் வகையில்; ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்காகிவிட்டது. தியேட்டருக்கு வருவதற்கு முன்பே எப்படி முழு படமும் ரிலீஸாகிறது என்று அனைவருமே உறைந்து போனார்கள். ரஜினி, கமல், சிரஞ்சீவி, சூர்யா, விஷால், ஜீவா, ஜிவி பிரகாஷ், சிவகார்த்திகேயன், விஜய் தேவரகொண்ட, பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் எல்லாம் தங்களது கடுமையான கண்டனங்களை பதிவு செய்திருக்கிறார்கள். இந்த செயலை செய்தவர்களை விரைவில் கைது செய்ய வேண்டும் என்றும் கோரிக்கைகள் வைத்திருக்கிறார்கள்.

விஜய்யின் அமைதி: இப்படி அனைவருமே கடும் கோபத்தில் கொதித்து தங்களது கருத்துக்களை சொல்கிறார்கள். ஆனால் படத்தின் ஹீரோ விஜய்யோ இதற்கும் அமைதியாகவே இருக்கிறார். அதை பார்த்த ஒருதரப்பினர் திரைத்துறையில் வேறு படங்களுக்கு பிரச்னை வந்தால்தான் குரல் கொடுப்பதில்லை. இப்போது தன்னுடைய பட பிரச்னைக்கே வாய் திறக்காமல் இருக்கிறாரே என நொந்துகொண்டார்கள். இந்நிலையில் இயக்குநரும், நடிகருமான அமீர் தனியார் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டி கவனத்தை ஈர்த்து பகீரை கிளப்பியிருக்கிறது.

Also Read
LIK Box Office Day 2 - எல்ஐகே 2வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல ரெஸ்பான்ஸ்
LIK Box Office Day 2 - எல்ஐகே 2வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் நல்ல ரெஸ்பான்ஸ்

அமீர் பேட்டி: அவர் பேசுகையில், 'எல். முருகன் மீது ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு வைத்திருக்கிறார். அதனை மறுக்கும் பொறுப்பு முருகனுக்கு இருக்கிறது. ஆனால் அவர் அமைதியாக இருக்கிறார். திரைப்படத்தில் சிறுபான்மையினர் தீவிரவாதிகளாக சித்திரிக்கிறார்களா என்ற கேள்வியை முன்வைக்கிறோம். நாங்கள் பார்த்த காட்சியை வைத்து கேட்கிறோம். அந்த சீனுக்கு முன்னாடி, பின்னாடி என்ன இருக்கிறது என தெரியவில்லை. கேள்வியையே சந்தேகத்தோடுதான் வைக்கிறேன். அதற்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு இயக்குநருக்கு இருக்கிறது. படத்தை பரப்பாதீர்கள் என அவர் சொல்கிறார்.

இதற்கும் அவர் பதில்தான் சொல்ல வேண்டும். ஆனால் அமைதி காக்கிறார். உயரத்தில் இருக்கக்கூடிய மௌனம் எப்போதும் சந்தேகத்துக்குரியதுதான். அதேபோல் கசிந்த காட்சிகளில் Edit Ref என்று இருக்கிறது. சென்சார் காப்பி என்றால் அதில் சென்சார் வாட்டர் மார்க் இருக்கும். இதில் எடிட் என்று இருக்கிறது. எனவே எடிட்டர்தான் குற்றவாளி" என்றார்.

அமீர் ஸ்டேட்டஸ்: முன்னதாக படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரித்த காட்சிகள் இடம்பெற்றிருப்பதாக பலர் கூறினார்கள். சோஷியல் மீடியாவில் பார்த்த பலரும், விஜய்க்கு இதே வேலையா? என்று அவரை கண்டிக்கிறார்கள். இயக்குநரும் நடிகருமான அமீர் தனது வாட்ஸ் அப்பில்,'கசிந்திருக்கும் ஜனநாயகனிலும் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகளா?.. இதுதான் தங்கள் அரசியலா?.. எப்போது மாறும் உங்கள் மனநிலை?' என கேள்வி எழுப்பியிருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X