ஜன நாயகன் லீக்.. பிரதமருக்கு பறந்த புகார்.. குற்றவாளி தட்டித் தூக்கப்படுவது உறுதி

டெல்லி: விஜய் நடித்து உருவான ஜன நாயகன் படமானது சில தினங்களுக்கு முன்னர் இணையத்தில் சட்டவிரோதமாக பதிவேற்றம் செய்யப்பட்டது. இது மொத்த திரைத்துறையினருக்கும் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்தது. தயாரிப்பாளர்கள் சங்கத்தில் இருந்து படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் கே நாராயணனைத் தொடர்பு கொண்டு பேசிய போது அவர் பெரும் துயரத்தில் இருந்ததாக பகிர்ந்து கொண்டனர்.

இந்த கொடுங் குற்றத்தைச் செய்தவர்கள் யார்? இந்த சம்பவம் மொத்த திரையுலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. ரூபாய் 500 கோடி முதலீடு போட்ட தயாரிப்பாளர் துக்கத்தின் உச்சத்தில் இருக்கிறார். கோடிக்கணக்கான மக்கள் இதனைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். இப்படி நடந்தால் படம் தயாரிக்க யார் முன் வருவார்கள்? குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்து, கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தனர்.

Vijay s Jana Nayagan Piracy Shock Producers Plan to Meet PM Narendra Modi Over Illegal Leak
Photo Credit:

இந்நிலையில் தயாரிப்பாளர் சங்கம் இந்த விவகாரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து புகார் அளிக்க உள்ளதாகவும், இதனால் இந்த விவகாரத்தில் கூடிய விரைவில் குற்றவாளி யார் என்று கண்டுபிடிக்கப் படுவார் என்றும் கூறி வருகின்றனர். பிரதமரின் கவனத்திற்கு பிரச்னை செல்வதால் குற்றவாளி எங்கிருந்தாலும் தட்டித் தூக்கப்படுவது உறுதி என்று திரைத்துறையில் உள்ளவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X