Jana Nayagan Release Date: ஜனநாயகன் ரிலீஸ் தேதி.. உறுதியா நம்பலாம் இந்த முறை தளபதிக்கு மிஸ்ஸே ஆகாது!
சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக் கழகத் தலைவருமான விஜய் நடித்து உருவாகி உள்ள படமான ஜன நாயகன் படம் படக்குழு தரப்பில் ஜனவரி 9ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் படத்திற்கு சென்சார் கிடைக்காததால் படத்தின் ரிலீஸ் தேதியில் மாற்றங்கள் ஏற்பட்டது. அதன் பின்னர் இப்போதுவரை படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு இன்னும் அறிவிக்கவில்லை. இப்படி இருக்கையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழுவுக்கு நெருங்கிய வட்டத்தில் இருந்து வெளியான தகவலின் படி, படத்தின் ரிலீஸ் தேதி கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுவிட்டது.
கே.வி.என் தயாரிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி விஜய் நடிப்பில் கடைசியாக வெளியாகவுள்ள படம் ஜனநாயகன். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இப்படி இருக்கையில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள ஜன நாயகன் எப்போதுதான் ரிலீஸ் ஆகும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. இந்நிலையில் படக்குழுவுக்கு நெருங்கிய தரப்பில் இருந்து வெளியாகி உள்ள தகவலின் படி, தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் முடிந்ததும் அடுத்த வாரத்தில் படத்தை வெளியிட படக்குழு முடிவு எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஒரு வேளை இதில் ஏதாவது சிரமங்கள் ஏற்பட்டால் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் படத்தை வெளியிட உறுதியாக இருப்பதாக கூறப்படுகிறது.

சென்சார்: எப்படியும் மார்ச் 17ஆம் தேதிக்குள் படத்திற்கு சென்சார் சான்றிதழ் கிடைத்துவிடும் அப்படி இருக்கையில் ஜூன் வரை படத்தை வெளியிட முடியாதோ என்ற சந்தேகம் பலருக்கும் இருந்தது. ஆனால் வளைகுடா நாடுகளில் நடைபெற்று வரும் போரின் காரணமாக டாக்ஸிக் மற்றும் துரந்தர் 2 படங்களின் ரிலீஸ் தேதிகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
ரிலீஸ் தேதி: இப்படி இருக்கையில் ஜன நாயகன் படத்தை ஏப்ரல் மாதத்திலோ அல்லது மே மாதத்திலோ ரிலீஸ் செய்ய ஏதுவாக இருக்கும் என்று படக்குழு நம்புவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே கனடாவில் படத்தை ரிலீஸ் செய்யும் யோர்க் சினிமாஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் ஜன நாயகன் படம் ஏப்ரல் 30ஆம் தேதி வரை இங்கு ரிலீஸ் ஆகாது என்று அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











