ஜனநாயகன் எப்போது வெளியாகும்?.. ரிலீஸ் தேதி பற்றி தயாரிப்பாளர் சொன்ன சூப்பர் விஷயம்.. பிரச்னை ஓவரா?

சென்னை: விஜய் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் ஜனநாயகன். இதில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கிறார். வில்லனாக பாபி தியோல் நடிக்க; மமிதா பைஜூ முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். இந்தப் படம் சென்சார் பிரச்னையில் தொடங்கி இணையத்தில் லீக்கானதுவரை ஏகப்பட்ட பஞ்சாயத்துக்களை பார்த்துவிட்டது. சூழல் இப்படி இருக்க படம் எப்போது ரிலீஸாகும் என்பது குறித்து அப்படத்தின் தயாரிப்பாளர் பேசியிருக்கிறார்.

அரசியல் பிரவேசம் செய்த விஜய் ஜனநாயகன் படத்தோடு சினிமாவிலிருந்து ஒதுங்குவதற்கு முடிவு செய்தார். இனிமேல் தங்கள் தளபதியை ஸ்க்ரீனில் பார்க்க முடியாது என்பதால் இந்தப் படத்தை ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள் அவரது ரசிகர்கள். ஜனவரி மாதம் ரிலீஸுக்கு தேவையான அத்தனை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் தர மறுத்துவிட்டதால் ரிலீஸாகவில்லை. இதனை எதிர்த்து கோர்ட்டுக்கு சென்றது தயாரிப்பு நிறுவனம். அங்கேயும் எதுவும் பாசிட்டிவ்வாக நடக்கவில்லை.

Vijay s Jana nayagan Release Date to Be Announced After Censor Clearance Says Producer
Photo Credit:

லீக்கான படம்: அதனையடுத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டு மறு தணிக்கைக்கு படம் அனுப்பி வைக்கப்பட்டது. அப்போதும் அதிகாரிகள் படத்தை பார்க்கவில்லை. எனவே படம் இனிமேல் ரிலீஸே ஆகாதோ என்றெல்லாம் பயம் கொள்ள ஆரம்பித்தார்கள் ரசிகர்கள். இப்படிப்பட்ட சூழலில் அவர்களுக்கு மேற்கொண்டு இடியை இறக்கும் விதமாக முழு படமும் சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் லீக்காகிவிட்டது. இந்த விவகாரத்தில் சிலர் கைது செய்யப்பட்டாலும்; சான்றிதழே பெறாத ஒரு படம் லீக்கானது அனைவருக்குமே அதிர்ச்சியைத்தான் கொடுத்தது.

Also Read
Karuppu Day 8 Box Office - சூர்யாவின் கருப்பு 8வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசுதான்
Karuppu Day 8 Box Office - சூர்யாவின் கருப்பு 8வது நாள் வசூல் இவ்வளவா?.. பாக்ஸ் ஆஃபிஸில் பட்டாசுதான்

அமைதி காத்த விஜய்: அந்த விஷயத்தில் விஜய்யை தவிர்த்து அனைவருமே கொதித்து பேசினார்கள். ஆனால் விஜய் இறுதிவரை மௌனமாகவே இருந்தார். இதெல்லாம் ஒருபக்கம் இருக்க விஜய்யும் தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராக பதவியேற்றுவிட்டார். இனிமேல் அந்தப் படம் ரிலீஸாவதில் எந்த சிக்கலும் இருக்காது என்றே தெரிகிறது. முக்கியமாக படத்தின் டைட்டில் கார்டில், 'தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்' என போடுவார்கள் என்று எதிர்பார்த்திருக்கிறார்கள்.

ஆர்டர் போட்ட விஜய்?: ஆனால் வரும் தகவல்களோ வேறு மாதிரி இருக்கின்றன. அதாவது, ஜனநாயகன் படத்தின் டைட்டில் கார்டில் முதலமைச்சர் என்று போட வேண்டாம்; வழக்கம்போல் 'தளபதி' என்று மட்டும் போடுமாறு தயாரிப்பு நிறுவனத்திடம் விஜய் கேட்டுக்கொண்டதாகவும் சொல்லப்படுகிறது. இது பொதுவானவர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றிருக்கிறது. இந்நிலையில் ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நேற்று திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அதனையடுத்து செய்தியாளர்களையும் சந்தித்தார்.

தயாரிப்பாளர் சொன்னது: அவர் பேசுகையில், "இந்தக் கோயிலுக்கு நான் முதன்முறையாக வருகிறேன். அமைதியை தேடி வந்திருக்கிறேன். ஜனநாயகன் படத்துக்கு இன்னமும் சென்சார் சான்றிதழ் கிடைக்கவில்லை. எப்போது வேண்டுமானாலும் கிடைக்கும் என்ற நிலை இருக்கிறது. அந்த சான்றிதழ் வந்த பிறகு ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தேதி சொல்லப்படும். அது கூடிய விரைவிலேயே நடக்கவிருக்கிறது. சென்சார் சான்றிதழ் கிடைப்பதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இங்கு நான் கடவுளிடம் ஆசீர்வாதம் வாங்க வந்திருக்கிறேன். மற்ற விஷயங்கள் பற்றி பேசுவதற்கு விருப்பமில்லை. விஜய் முதலமைச்சரானது எனக்கு ரொம்பவே மகிழ்ச்சி" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X