ரிலீஸ் ரேஸில் விஜய்யை ஓரம் கட்டிய சீமான்.. எப்படியெல்லாம் யோசிக்குறாங்க!
சென்னை: நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கிய பின்னர் வெளியான படம் என்றால் அது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான படமான தி கோட் படம் தான். அதன் பின்னர் அவர் இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் கமிட் ஆன படம் தான் ஜன நாயகன். இந்த படத்தை ஜனவரி மாதமே ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் படத்திற்கான சான்றிதழ் கிடைக்காததால் படத்தை ரிலீஸ் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் படத்தை வெளியிட முடியவில்லை.
இப்படி இருக்கும்போது ஜன நாயகன் படம் வெளியாவதில் முறையான சான்றிதழ் கிடைக்காததுதான் காரணம் என்றாலும், திரைமறைவில் நடைபெற்ற அரசியல் நடவடிக்கைகள் தான் உண்மையான காரணம் என்று தவெகவினரும் விஜய் ரசிகர்களும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். எப்படியும் படத்தை தேர்தலுக்கு முன்னதாக ரிலீஸ் செய்து விடலாம் என்று படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் படத்தை ரிலீஸ் செய்ய முடியவில்லை.

படத்திற்கு வெளிநாடுகளில் எல்லாம் சான்றிதழ் கிடைத்துவிட்டாலும், இந்தியாவில் கிடைக்க வில்லையே என்று எல்லாம் விஜய் ரசிகர்கள் ஆதங்கப்பட்டனர். இதற்கு காரணம் திமுக தான் என்று எல்லாம் கூட தவெக பொறுப்பாளர்கள் தொடங்கி விஜய் ரசிகர்கள் வரை பலரும் தெரிவித்தனர். ஆனால் ஜன நாயகன் ரிலீஸ் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் குரல் கொடுத்ததற்கு விஜய் நன்றி தெரிவித்திருந்தார்.
அரசியலில் களமிறங்கியதால் தான் விஜய்க்கு இந்த நெருக்கடி என்று பலரும் தெரிவித்து வந்தனர். இப்படி இருக்கையில் அரசியல் களத்தில் விஜய்யை விட மிகவும் மூர்க்கமாகவும் ஆவேசத்துடன் செயல்பட்டு வரும் சீமான் நடித்த படம் ஏப்ரல் 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது. அதாவது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி உள்ள படமான லவ் இன்சூரன்ஸ் கொம்பனி என்ற படத்தில் சீமா, குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இந்த படம் வரும் ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகவுள்ளதால், இணையவாசிகள் சிலர் ரிலீஸ் ரேஸில் விஜய்யை அசால்ட்டாக ஓரம் கட்டிவிட்டாரே சீமான் என்று பதிவிட்டு வருகிறார்கள். அதேபோல் சீமானின் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சிலர் ரிலீஸில் மட்டுமல்லாமல், தேர்தலில் விஜய்யை சீமான் ஓரம் கட்டுவார் என்று பதிவிட்டு வருகிறார்கள். இப்படியான பதிவுகளைப் பார்த்த பலரும் எப்படியெல்லாம் யோசிக்கறாங்க என்று பதிவிட்டு வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











