ஜனநாயகன் புதிய ரிலீஸ் தேதி?.. அந்தத் தேதிதான் பொங்கல் ஸ்டார்ட்டோ? - தை பிறந்தால் தான் வழி கிடைக்குமோ
சென்னை: சென்சார் சான்றிதழ் வழங்காததன் காரணமாக ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸிலிருந்து ஜனநாயகன் படம் தள்ளிப்போயிருக்கிறது. இதனால் விஜய் ரசிகர்கள் உச்சக்கட்ட சோகத்தில் இருந்தார்கள். ஆனாலும் தளபதி படம் வரும் தினம்தான் தங்களுக்கு பொங்கல் என உறுதியெடுத்து எப்போது படம் வந்தாலும் கொண்டாடுவதற்கு தயாராக இருக்கிறார்கள். இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி பற்றி பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசியிருக்கிறார்.
ஜனநாயகன் படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸுக்கு பிளான் செய்யப்பட்டிருந்தது. ஆனால் படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் வழங்காததால் நீதிமன்றத்துக்கு சென்றது தயாரிப்பு நிறுவனம். வழக்கை இன்றைக்கு ஒத்திவைக்கவும் செய்துவிட்டது நீதிமன்றம். எனவே ஒன்பதாம் தேதிக்குள் சென்சார் சான்றிதழை வாங்க முடியாது என்பதால் ஒன்பதாம் தேதி ரிலீஸை தள்ளி வைத்திருக்கிறது.
ரசிகர்கள் சோகம்: பொங்கல் ரேஸிலிருந்து ஜனநாயகன் விலகியதால் அவரது ரசிகர்கள் சோகமடைந்தார்கள். பட தயாரிப்பு நிறுவனமும் உருக்கத்துடன் அறிவிப்பை வெளியிட்டது. இவை அனைத்துக்கும் பின்னணியில் அரசியல்தான் இருக்கிறது; பாஜகவும், திமுகவும்தான் காரணம் என்று விஜய்யின் ரசிகர்கள் கொதிப்புடன் கூறிவருகிறார்கள். சோஷியல் மீடியா முழுக்க தவெகவினருக்கும், திமுகவினருக்குமிடையே வாக்குவாதம் நிரம்ப ஆரம்பித்திருக்கின்றன.

டிக்கெட் பணம்: டிக்கெட் புக்கிங்கை பொறுத்தவரை தமிழ்நாட்டில் சில இடங்களில் ரிசர்வேஷன் தொடங்கியது. அதில் பலர் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துவிட்டார்கள். ஆனால் இப்போது படம் ரிலீஸாகாது என்ற அறிவிக்கப்பட்டுவிட்டதால்; அந்த டிக்கெட்டுகளுக்கான பணத்தை திருப்பி கொடுக்கும் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தியேட்டர்கள் இறங்கியிருக்கின்றன. எப்போது படம் ரிலீஸானாலும் இதே உற்சாகத்தோடு பார்க்க ரசிகர்கள் தயாராக இருக்கிறார்கள்.
செய்யாறு பாலு பேச்சு: இந்நிலையில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி குறித்து பிரபல பத்திரிகையாளர் செய்யாறு பாலு பேசுகையில், "சினிமாவில் மார்க்கெட் இழந்து காணாமல் போன பல நடிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் விஜய்யோ மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கும்போதே அதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி மக்களுக்கு சேவை செய்ய வந்திருக்கிறார். அவரை ரசிகர்கள் கொண்டாடிவருகிறார்கள். விஜய் வரும்போது அதுதான் பொங்கல் என நினைக்கிறார்கள்.
புதிய ரிலீஸ் தேதி: 14ஆம் தேதி ரிலீஸுக்கு வந்தால், தியேட்டர்கள் கிடைப்பதில் சிக்கல். தெலுங்கில் வேறு மூன்று படங்கள் வருகின்றன. அவற்றில் ஒரு படம் க்ளிக் ஆகிவிட்டால்கூட அதனை தியேட்டரிலிருந்து உரிமையாளர்கள் தூக்க மாட்டார்கள். எனவே ஜனவரி 22ஆம் தேதி படத்தின் ரிலீஸ் செல்வதற்கு வாய்ப்பு இருக்கிறது" என்றார். செய்யாறு பாலு கூற்றுப்படி பார்த்தால் ஜனவரி 22ஆம் தேதி ஜனநாயகன் ரீலீஸாகுமோ என கேள்வி எழுப்ப ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால், அந்த தேதியில் படம் வெளியாகும் என்பதற்கு எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.


Click it and Unblock the Notifications











