ஜனநாயகன் பற்றி சூர்யா தந்தை சிவக்குமார் ஓபன்.. படம் பார்க்க இவ்வளவு ஏங்குறாரா?..சீக்கிரம் ரிலீஸ் பண்ணுங்க ப்பா
சென்னை: ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி ரிலீஸாவதாக இருந்தது. ஆனால் சென்சார் அதிகாரிகள் சான்றிதழ் கொடுக்காததால் ரிலீஸ் செய்ய முடியாத சூழ்நிலை உருவானது. இதனையடுத்து பட தயாரிப்பு நிறுவனம் நீதிமன்றத்துக்கு சென்றது. விரைவில் இந்த விவகாரத்தில் கோர்ட் நல்லவிதமான தீர்ப்பை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சூர்யாவின் தந்தை சிவக்குமார் ஜனநாயகன் பற்றி பேசியிருக்கிறார்.
அரசியல் பிரவேசம் செய்திருக்கும் விஜய் ஜனநாயகன் படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இதுதான் அவரது கடைசி படம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அரசியல் கட்சி ஆரம்பித்திருப்பதால் கண்டிப்பாக இப்படத்துக்கு நெருக்கடிகள் வரும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சென்சார் அதிகாரிகள் குடைச்சல் கொடுப்பார்கள் என்று படக்குழுவும், விஜய்யின் ரசிகர்களும் கண்டிப்பாக எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.
என்ன நடந்தது?: அதாவது படத்தை பார்த்த அதிகாரிகள், அதில் மதத்தை புண்படுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக கூறி சான்றிதழ் கொடுக்க மறுத்துவிட்டார்கள். எப்படியும் சான்றிதழ் கிடைத்துவிடும்; திட்டமிட்டபடி ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸ் செய்துவிடலாம் என்று நினைத்திருந்தது படக்குழு. ஆனால் இறுதிவரை கிடைக்காததால்; நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதனை முதலில் விசாரித்த தனி நீதிபதி உடனடியாக யு/ஏ சான்றிதழ் வழங்குமாறு உத்தரவிட்டார்.

தொடர்ந்து சிக்கல்தான்: அந்த உத்தரவுக்கு எதிராக தணிக்கை வாரியம் செய்த மேல்முறையீட்டில் அதற்கு சாதகமாக தீர்ப்பு வர; உடனடியாக உச்ச நீதிமன்றத்துக்கு சென்றது கேவிஎன் நிறுவனம். ஆனால் சுப்ரீம் கோர்ட் விசாரிக்க மறுத்துவிட்டதால் மீண்டும் உயர் நீதிமன்றத்துக்கே விசாரணை நடைபெற்றது. கண்டிப்பாக இந்த முறை சாதகமான தீர்ப்பு வரும் என்றுதான் கருதப்பட்டது. ஹை கோர்ட்டோ மீண்டும் தனி நீதிபதி விசாரிக்க வேண்டும் என்று தீர்ப்பு கொடுத்து ட்விஸ்ட் அடித்தது.
எப்போது தீர்ப்பு?: இதனால் விஜய் ரசிகர்களும், பட தயாரிப்பு நிறுவனமும் அப்செட்டாகியிருக்கின்றன. இப்போதுவரை விசாரணைக்கு அந்த வழக்கை நீதிமன்றம் பட்டியலிடவில்லை. எனவே எப்போது விசாரணைக்கு வந்து படம் எப்போது ரிலீஸாவது என சோர்ந்து போய்விட்டார்கள் பலரும். இது ஒருபக்கம் இருக்க பேசாமல் வழக்கை வாபஸ் பெற்றுவிட்டு மறு தணிக்கைக்கு படத்தை அனுப்ப கேவிஎன் நிறுவனம் முடிவு செய்திருப்பதாகவும் ஒரு தகவல் ஓடிக்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஜனநாயகன் பற்றி சிவக்குமார்: இந்நிலையில் ஜனநாயகன் பற்றி நடிகரும், சூர்யாவின் தந்தையுமான சிவக்குமார் பேசியிருக்கிறார். சமீபத்தில் பாக்யராஜுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. அப்போது பேசிய பார்த்திபன் சிவக்குமாரை நோக்கி, 'முந்தானை முடிச்சு உள்ளிட்ட படங்களின் மூலக்கதையை பாக்யராஜிடம் இப்போது கேட்டாலே அவர் மறந்திருப்பார். ஆனால் சிவக்குமார் அப்படியே சொல்வார். பராசக்தி கதையை இப்போது கேட்டாலும் சொல்வார். நான் பழைய பராசக்தியை சொல்கிறேன். அதேபோல் ஜனநாயகன் கதையை கேட்டாலும் சொல்வார்" என்றார். உடனே சிவக்குமாரோ, 'நான் இன்னும் ஜனநாயகன் பார்க்கவில்லை டா' என கூறினார். அதை பார்த்த ரசிகர்களோ ஜனநாயகனை பார்க்கவில்லை என ஏக்கமாக சொல்வது போல் இருக்கிறது. சீக்கிரம் படத்தை ரிலீஸ் செய்யுங்க ப்பா என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











