விஜய்யின் ஜனநாயகன்.. போஸ்டரா இது?.. வினோத்துக்கு என்ன ஆச்சு?.. கலாய்க்கும் ரசிகர்கள்

சென்னை: ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி ரிலீஸாகவிருக்கிறது. மிகப்பெரிய எதிர்பார்ப்பை பெற்றிருக்கிறது இப்படம். இதன் இசை வெளியீட்டு விழா வரும் 27ஆம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் படத்தின் இரண்டாவது சிங்கிள் நாளை வெளியாகும் என்று அறிவிப்பு வந்திருக்கும் சூழலில் படத்தின் போஸ்டரை பயங்கரமாக கலாய்க்கிறார்கள் ரசிகர்கள்.

தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி அரசியலுக்கு விஜய் வந்திருப்பதால் இன்னும் ஒரு படத்தில் மட்டுமே நடிப்பேன் என்று அறிவித்திருக்கிறார். அவர் அரசியலுக்கு வந்தது அவருடைய ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும்; சினிமாவுக்கு டாட்டா சொல்லவிருப்பது ரொம்பவே சோகத்தை கொடுத்திருக்கிறது. வினோத் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஜனநாயகன் படத்தை திருவிழா போல் கொண்டாடுவதற்கு இப்போதிருந்தே தயாராகிவருகிறார்கள்.

மைல் கல்லாக அமையுமா?: இதுதான் தளபதியின் கடைசி படம் என்று சொல்லப்படுவதால்; யாராலும் மறக்க முடியாத அளவுக்கு இந்தப் படத்தை வினோத் கொடுக்க வேண்டும் என்று விஜய் ரசிகர்கள் ஆசையில் காத்திருக்கிறார்கள். இப்போதைய தலைமுறை இயக்குநர்களில் வினோத் முக்கியமானவர் என்பதால் கண்டிப்பாக தரமான சம்பவத்தை இதில் செய்திருப்பார்; தேர்தலுக்கு முன்னதாக படம் ரிலீஸாவதால் இப்படம் விஜய்யின் அரசியல் வாழ்க்கைக்கும் உதவ வாய்ப்புகள் இருப்பதாக அவர்கள் கருதுகிறார்கள்.

Vijay s Jana nayagan Second Single Tomorrow Fans Troll Poster Ahead of Malaysia Audio Launch
Photo Credit:

மலேசியாவில் விழா: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி ஒன்பதாம் தேதி படமானது ரிலீஸாகவிருக்கிறது. படத்தின் வியாபாரங்கள் திருப்திகரமாக நடக்க ஆரம்பித்துவிட்டன. இது ஒருபக்கம் படத்துடைய ஆடியோ வெளியீட்டு விழா எங்கே நடக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. இங்கு நடந்தால் ஆளும் தரப்பின் மூலம் நெருக்கடி வரலாம் என்று பேச்சுக்கள் எழுந்த நிலையில்; அதிரடியாக மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் விழாவை நடத்த முடிவு செய்துவிட்டது படக்குழு.

பகவந்த் கேசரி ரீமேக்: டிசம்பர் 27ஆம் தேதி அவ்விழா நடக்கவிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கிடையே தளபதி கச்சேரி என்ற முதல் சிங்கிள் சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. முக்கியமாக அதில் மமிதா பைஜு அணிந்திருந்த உடை, செயினை எல்லாம் பார்க்கும்போது இது பகவந்த் கேசரி ரீமேக்காக இருக்குமோ என்றுதான் பலரும் சோஷியல் மீடியாவில் பேசினார்காள். ஆனால் அப்படி எதுவும் இருக்காது என்று நம்பிக்கை.

நாளை இரண்டாவது சிங்கிள்; கலாய்க்கும் ரசிகர்கள்: சூழல் இப்படி இருக்க நாளை படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் அந்த அறிவிப்போடு வந்த போஸ்டரை பார்த்து ரசிகர்கள் கலாய்த்து தள்ளுகின்றார்கள். ஜீப்பின் மீது விஜய் நிற்பது மாதிரியான போஸ்டரை படக்குழு வடிவமைத்திருந்தது. அதை பார்த்த ரசிகர்களோ என்னது இது; இந்த போஸ்டர் ஒரு ரிச்சாகவே இல்லை; ஏதோ ஊரில் கட் அவுட் வைப்பது போன்று இருப்பதாக கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X