சமீபத்தில் பெரிய்ய விலைக்கு அதி வேகமாக விற்றுத் தீர்ந்தது ஜில்லாதானாம்...!

By Shankar

தலைவா படப் பிரச்சினைகள், இப்போது தான் விஜய்யை வைத்துத் தயாரிக்கும் ஜில்லாவுக்கு ஏதாவது பிரச்சினைகளை இழுத்துவிடுமோ என கொஞ்சம் யோசனையில் இருந்த தயாரிப்பாளர் ஆர் பி சவுத்ரி, இப்போது மகா உற்சாகமாகியிருக்கிறார்.

அவரது ஜில்லா படம் பெரிய்ய விலைக்கு விற்றதுதான் இதற்குக் காரணம்.

இத்தனை வேகமாகவும் அதிக விலைக்கும் சமீபத்தில் எந்தப் படமும் விற்கப்பட்டதில்லை என்று சொல்லும் அளவுக்கு நல்ல விலைக்குப் போயுள்ளதாம் தலைவா.

விஜய் - மோகன்லால்

விஜய் - மோகன்லால்

விஜய் - மோகன் லால் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள இந்தப் படத்தில் காஜல் அகர்வால், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இமான் இசை

இமான் இசை

இந்தப் படத்துக்கு இமான் இசையமைத்துள்ளார். விஜய் ரசிகர்களைத் துள்ளாட்டம் போட வைக்கும் அளவுக்கு பாடல்களை உருவாக்கியுள்ளாராம்.

பேட்ச் அப்புக்காக மும்பைக்கு பேக்கப்

பேட்ச் அப்புக்காக மும்பைக்கு பேக்கப்

படத்தின் பணிகள் அனைத்தும் முடிந்துவிட்டன. சில பேட்ச் வேலைகளுக்காக விஜய் - காஜல் உள்ளிட்ட குழுவினர் மும்பைக்கு செல்கின்றனர்.

விற்பனை அறிவிப்பு

விற்பனை அறிவிப்பு

இந்த நிலையில் படத்தின் விற்பனையை ஏரியாவாரியாகப் பிரித்து விற்கப் போவதாக நேற்றுதான் அறிவித்தார் ஆர் பி சவுத்ரி.

24 மணி நேரத்துக்குள்

24 மணி நேரத்துக்குள்

அவர் அறிவித்த 24 மணி நேரத்துக்குள் படத்தின் அனைத்து பகுதிகளுக்கான விற்பனை உரிமை பெரும் விலைக்குப் போய்விட்டன. பல விநியோகஸ்தர்களும் படத்தை வாங்கப் போட்டி போட்டனர்.

முதல் முறை

முதல் முறை

சமீபத்தில் இவ்வளவு விலைக்கு அதி வேகமாக விற்றுத் தீர்ந்தது ஜில்லா படம்தான் என்பதுதான் சினிமா பிரமுகர்கள் மத்தியில் பேச்சாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X