விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் ஜில்லா படத்துக்கு யு சான்றிதழ்!
விஜய்யின் பொங்கல் ஸ்பெஷல் படமான ஜில்லாவுக்கு தணிக்கைக் குழு யு சான்று அளித்துள்ளது. இதன் மூலம் வரி விலக்கு, சேனல் ஒளிபரப்பு போன்றவற்றை எந்த சிக்கலும் இல்லாமல் இந்தப் படம் கடந்துவிடும் எனத் தெரிகிறது.
சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் - மோகன்லால், காஜல் அகர்வால் ஆகியோர் நடித்துள்ள படம் ஜில்லா.

ஆர்.டி. நேசன் இயக்கத்தில் பொங்கல் பண்டிகைக்கு வெளியாகிறது. ரிலீசுக்கு இன்னும் பத்து நாட்களே உள்ள நிலையில் படத்தின் ட்ரைலரும் வெளியாகிவிட்டது.
இந்த நிலையில் படத்தை பக்காவாக முடித்துவிட்டு, தணிக்கைக் குழுவினருக்கு போட்டுக் காட்டினர்.
படத்தைப் பார்த்த அதிகாரிகள், அனைவரு பார்க்கத் தகுந்ததாக உள்ளதாகக் கூறி, ஜில்லாவுக்கு யு சான்று வழங்கினர்.

இது விஜய்க்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்துள்ளது. இப்போதெல்லாம் யு சான்று இல்லாவிட்டால் வரி விலக்கு கிடைக்காது, டிவியில் ஒளிபரப்பவும் முடியாது என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.
ஜில்லாவை பெரும் விலைக்கு வாங்கியுள்ளது சன் டிவி என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











