தெலுங்கில் ரீமேக் செய்யப்படும் ஜில்லா
சென்னை: விஜய் நடிப்பில் வெளியான ஹிட் படமான ஜில்லாவை தெலுங்கில் ரீமேக் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம்.
விஜய் பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். அவருக்கு வெற்றியை கொடுத்த படங்களில் பல ரீமேக் படங்கள் தான். கோலிவுட்டின் ரீமேன் மன்னன் என்று கூட விஜய்யை கூறலாம்.
இந்நிலையில் விஜய்யின் ஜில்லா ரீமேக் செய்யப்படுகிறது.

தெலுங்கில்
விஜய்யின் ஜில்லா கல்லா கட்டியதை பார்த்த பட தயாரிப்பாளர்கள் அதை தெலுங்கில் ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளார்களாம்.

துப்பாக்கி
முன்னதாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த துப்பாக்கி படம் இந்தியில் அக்ஷய் குமாரை வைத்து ரீமேக் செய்யப்பட்டுள்ளது. படம் ரிலீஸ் செய்ய தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வீரம்
வீரம் படத்தை தெலுங்கு மற்றும் இந்தியில் ரீமேக் செய்ய இயக்குனர் சிவாவுக்கு வாய்ப்புகள் வந்து குவிந்துள்ளது. இந்நிலையில் ஜில்லாவும் தெலுங்கில் ரீமேக் செய்யப்படவிருக்கிறது.

தெலுங்கில் யாரோ?
ஜில்லா தெலுங்கு ரீமேக்கில் விஜய் மற்றும் மோகன்லால் கதாபாத்திரங்களில் யார் நடிக்கப் போகிறார்களோ? பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











