நூறு ஏக்கர் சோளக் காட்டில் விஜய், மோகன்லால் வில்லன்கள் மோதல்

By Shankar

விஜய் நடிக்கும் ஜில்லா படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.

படத்தில் நூறு ஏக்கர் சோளக்காட்டில் விஜய்யும் மோகன்லாலும் வில்லன்களுடன் மோதும் காட்சி பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது.

சூப்பர்குட் பிலிம்ஸ் ஆர்.பி.சௌத்திரி வழங்க விஜய் - காஜல் அகர்வால் நடிக்கும் "ஜில்லா" படம் பொங்கலுக்கு வெளியாகிறது.

இதில் மோகன்லால் சிறப்பானதொரு தோற்றத்தில் நடித்துள்ளார்.

மற்றும் மகத், சூரி, தம்பிராமய்யா, பூர்ணிமா பாக்யராஜ், நிவேதா, சம்பத், சரண், ஆகியோர் நடிக்கிறார்கள்.

ரமேஷ் - ஜீவா

ரமேஷ் - ஜீவா

கணேஷ் ராஜவேல் ஒளிப்பதிவு செய்ய, இமான் இசையமைக்கிறார். வைரமுத்து, விவேகா, யுகபாரதி, பார்வதி பாடல்களை எழுதியுள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம், இயக்கத்தை ஆர்டி நேசன் கவனிக்கிறார். முதல்முறையாக இந்தப் படத்தில் இணை தயாரிப்பு என்ற பெயரில் சுரேஷ் சௌத்ரி, ஜீவன் ரமேஷ், ஜீவா ஆகியோர் பெயர் போடப்பட்டுள்ளது.

நூறு ஏக்கர்

நூறு ஏக்கர்

இந்தப் படத்தின் சண்டைக்காட்சிக்காக ஹைதராபாத்தில் நூறு ஏக்கர் சோளக் காட்டை பேசி வாங்கினார் தயாரிப்பாளர் சௌத்ரி. அதில் கொஞ்சம் பகுதியில் சமன் செய்து அதில் பிரமாண்டமான அரங்கு அமைக்கப்பட்டது.

40 ஸ்டன்ட் கலைஞர்கள்

40 ஸ்டன்ட் கலைஞர்கள்

அந்த அரங்கில் விஜய், மோகன்லால் இருவரும் இணைந்து வில்லன்களுடன் பயங்கரமாக மோதும் சண்டைக் காட்சி ஒன்று பத்து நாட்கள் படமாக்கப்பட்டது. இதில் 40 ஸ்டன்ட் கலைஞர்கள் பங்கேற்றனர்.

ஒரு கோடி ரூபாய்

ஒரு கோடி ரூபாய்

அதற்காக அமைக்கப்பட்ட அரங்குக்காக மட்டும் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செலவு செய்யப் பட்டுள்ளது. இந்த சண்டைக் காட்சியை ஆறு நவீன காமிரா யுக்தியுடன் படமாக்கி இருக்கிறார்கள்.

பிரமிக்க வைக்கும்

பிரமிக்க வைக்கும்

அந்த நூறு ஏக்கர் சோளக் காட்டையும் ஹெலிகேம் என்கிற நவீன காமிரா மூலம் படமாக்கி இருப்பது திரையில் பார்க்கும் போது பிரமிக்க வைக்கும் என்கிறார் இயக்குநர் நேசன்.

பொங்கலுக்கு...

பொங்கலுக்கு...

படத்தை பொங்கலுக்கு கொண்டு வருவதில் தீவிரமாக இருப்பதால், படப்பிடிப்பு நடக்கும்போதே போஸ்ட் புரொடக்ஷன் பணிகளையும் ஆரம்பித்துவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X