அதிரடி காட்டிய ஜாலியோ ஜிம்கானா... 15 நிமிடத்தில் 10 லட்சம் வியூஸ்

சென்னை : நடிகர் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவாகியுள்ள பீஸ்ட் படத்தின் இரண்டாவது பாடல் லிரிக் வீடியோவாக தற்போது வெளியாகியுள்ளது. இந்தப் பாடல் வெறித்தனமான விஜய் ரசிகர்களுக்கு சிறப்பான விருந்தை அளித்துள்ளது.

தளபதியின் பீஸ்ட்

தளபதியின் பீஸ்ட்

தளபதி விஜய், பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், உள்ளிட்டவர்கள் நடித்துள்ள படம் பீஸ்ட். இந்தப் படத்தின் சூட்டிங், போஸ்ட் புரோடக்ஷன்ஸ் பணிகள் நிறைவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்நிலையில் தற்போது படத்தின் பிரமோஷன்களில் சன் பிக்சர்ஸ் ஈடுபட்டுள்ளது.

சிறப்பான முதல் பாடல்

சிறப்பான முதல் பாடல்

படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை ஏற்கனவே ரிலீசாகி ரசிகர்களை வெகுவாக ஈர்த்த நிலையில், கடந்த மாதத்தில் படத்தின் முதல் பாடல் காதலர் தினத்தையொட்டி வெளியானது. இந்தப் பாடல் அனிருத் இசையில் அரபிக்குத்து என்ற பெயரில் வெளியானது. இந்தப் பாடலில் விஜய் மற்றும் பூஜா ஹெக்டேவின் நடனம் மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.

சர்வதேச அளவில் புகழ்

சர்வதேச அளவில் புகழ்

இந்தப் பாடல் தற்போது 20 கோடி வியூஸ்களை நெருங்கியுள்ளது. இந்தப் பாடல் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளது. சர்வதேச அளவில் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடி பிரபலங்கள் மட்டுமின்றி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்தப் பாடலை மிகவும் விருப்பத்துடன் பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல நடிகர்கள் நடனம்

பிரபல நடிகர்கள் நடனம்

சமந்தா, ராஷ்மிகா உள்ளிட்ட பிரபலங்களும் இந்தப் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களை பகிர்ந்தனர். இந்நிலையில் இன்றைய தினம் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகவுள்ளது. இதையொட்டி இரு தினங்களுக்கு முன்பு வெளியான ப்ரமோ பட்டையை கிளப்பி வருகிறது.

ஜாலியோ ஜிம்கானா பாடல்

ஜாலியோ ஜிம்கானா பாடல்

இந்தப் பாடலில் ஜாலியான விஜய், பூஜா உள்ளிட்டவர்களை பார்க்க முடிந்தது. இந்தப் பாடல் குறித்து இன்று காலையிலும் சன் பிக்சர்ஸ் புதிய ப்ரமோவை வெளியிட்டிருந்தது. இதில் படத்தின் இயக்குநர், ரெடின் கிங்க்ஸ்லி உள்ளிட்டவர்கள் இணைந்து ஃபன் செய்திருந்தனர்.

15 நிமிடங்கள்... 10 லட்சம் வியூஸ்

15 நிமிடங்கள்... 10 லட்சம் வியூஸ்

இந்நிலையில் தற்போது படத்தின் இரண்டாவது பாடல் ஜாலியோ ஜிம்கானாவை தற்போது சன் பிக்சர்ஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்தப் பாடலுக்காக ரசிகர்கள் காத்திருந்த நிலையில் வெளியான 15 நிமிடங்களில் 10 லட்சம் வியூஸ்களை பாடல் தற்போது பெற்றுள்ளது.

4 லட்சம் லைக்ஸ்

4 லட்சம் லைக்ஸ்

அனிருத் இசையில் கலக்கலாக வெளியாகியுள்ள இந்தப் பாடல் 4 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ்களையும் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கமெண்ட்களையும் பெற்றுள்ளது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கோடைக் கொண்டாட்டமாக ஏப்ரலில் வெளியாகவுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X