மோடியுடன் விஜய் சந்திப்பு.. 'கத்தி' க்கு 'கத்திக்குத்து' கன்பர்ம்ட்???

By Sudha

சென்னை: ஏற்கனவே டைம் டூ லீ்ட் என்று பன்ச்லைன் போட்டு, தலைவா படத்தின் மூலம் பட்ட அவஸ்தையிலிருந்து மீள்வதற்குள் அடுத்த பஞ்சாயத்தை வாலன்டியராக விஜய்யே கூட்டிக் கொண்டு வந்திருப்பது அவரது நலம் விரும்பிகளை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

டைம் டூ லீட் என்று படத்திற்கு பன்ச் லைன் வைத்தும், எம்.ஜி.ஆர். - அண்ணா பேச்சும் மேலிடத்தை டென்ஷன்படுத்தியதால் தலைவா படம் சந்தித்த பாடடு அனைவருக்குமே தெரியும்.

அது முடிந்து தற்போதுதான் ரிலாக்ஸ் ஆகியுள்ள விஜய், தற்போது மோடியைச் சந்தித்ததன் மூலம் மறுபடியும் ஒரு ரிஸ்க்கை கையில் எடுப்பதாக கருதப்படுகிறது.

சங்கடம் - தலைவா

சங்கடம் - தலைவா

தலைவா படத்தின் பன்ச்லைன் ஆளுங்கட்சியை உரசிப் பார்க்கும் செயல் என்று அத்தரப்பு கொந்தளிக்க, படத்திற்கு வந்தது பஞ்சாயத்து.

கோடநாடு வரை ஓடி

கோடநாடு வரை ஓடி

இந்தப் படத்தின் சிக்கலைத் தீர்க்க விஜய் தரப்பு கடுமையாக பல வழிகளிலும் முயன்றது. அப்பாவும், மகனும் கோடநாடு எஸ்டேட் வரை ஓட வேண்டிதாயிற்று.

கண்ணீர் விட்டு அழுத தயாரிப்பாளர்

கண்ணீர் விட்டு அழுத தயாரிப்பாளர்

படத்தின் தயாரிப்பாளர் பிரஸ் மீட் வைத்து கண்ணீர் விட்டு அழுத கதையும் அரங்கேறியது.

டைம் டூ கட்...

டைம் டூ கட்...

அதைத் தொடர்ந்து சில பல சமரச பஞ்சாயத்துக்களுக்குப் பின்னர் டைம் டூ லீட் என்ற பன்ச்சை எடுத்து விட்டு படத்தை ரிலீஸ் செய்தனர்.

மோடியால்.. புதுப் பிரச்சினை

மோடியால்.. புதுப் பிரச்சினை

இந்த நிலையில் இப்போதைக்கு ஜெயலலிதாவின் எதிரியான மோடியைப் போய் விஜய் சந்தித்திருப்பது ஆளும் தரப்பை உசுப்பிப் பார்க்கும் என்று சந்தேகிக்கப்படுகிறது.

கத்திக்கு அபாயம்...

கத்திக்கு அபாயம்...

தற்போது விஜய் கத்தி என்ற புதிய படத்தில் வருகிறார். அவர் மோடியை பார்த்துள்ள நிலையில் நாளை மேடையும் ஏறி வி்ட்டால் அம்மாவின் கோபத்திற்கு ஆளாவது உறுதி என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே சிக்கல்

ஏற்கனவே சிக்கல்

ஏற்கனவே கத்தி படம் ராஜபக்சேவின் கைக்கூலியின் படம் என்று ஒரு சர்ச்சை உள்ளது என்பது நினைவிருக்கலாம்.

புண்ணை நோண்டி விட்ட கதையாக

புண்ணை நோண்டி விட்ட கதையாக

இந்த நிலையில் மோடியைப் பார்த்து புண்ணை நோண்டி விட்ட கதையாக விஜய்யே வாலன்டியராக புதுப் பிரச்சினையை இழுத்துக் கொள்கிறாரோ என்று சந்தேகப்பட வேண்டியுள்ளது.

'கத்திக் குத்துக்கு' வாய்ப்பு அதிகம்

'கத்திக் குத்துக்கு' வாய்ப்பு அதிகம்

மோடியை விஜய் பார்த்துள்ள நிலையில், அவரது கத்தி, ஆளும் தரப்பால் கத்திக்குத்துக்கு ஆளாகும் என்று பேச்சு இப்போதே எழுந்து விட்டது. பொறுத்திருந்து பார்ப்போம்.. கத்தி சேதாரமில்லாமல் ஸ்கீரீனை தாக்குமா என்பதை.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X