விஜய் பிறந்த நாளில் கத்தி படத்தின் 'ஃபர்ஸ்ட் லுக்'!
சென்னை: விஜய் நடிக்கும் கத்தி படத்தின் முதல் தோற்றம் மற்றும் வடிவமைப்பு வரும் ஜூன் மாதம் வெளியாகிறது.
லைக்கா புரொடக்ஷன்ஸ் தயாரிக்க, ஏ ஆர் முருகதாஸ் இயக்கும் புதிய படம் கத்தி. விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்க, வில்லனாக தமிழுக்கு முதல் முறையாக வருகிறார் பாலிவுட் நடிகர் நீல் நித்தின் முகேஷ்.
அனிருத் இசையமைக்க, ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படம் குறித்து பல சர்ச்சைகள் இருந்தாலும், ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்க்கும் படங்களுள் ஒன்றாக மாறியுள்ளது.

இந்தப் படத்தின் ஃபர்ஸ் லுக் எனப்படும், முதல் தோற்றப் படங்கள் மற்றும் டீசர் வரும் ஜூன் மாதம் வெளியாகவிருக்கின்றன. ஜூன் 22-ல் விஜய் பிறந்த நாள் என்பதால் அதையொட்டி இந்தப் புகைப் படங்களை வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். இதற்காகவே தனி போட்டோ ஷூட்டும் நடத்தப் போகிறார்களாம்.
கத்தி படத்தின் ஷூட்டிங் படு வேகமாக நடந்து வருகிறது. சென்னையில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு, ஹைதராபாதில் பாடல் காட்சியைப் படமாக்க உள்ளார்களாம்.
தீபாவளி ஸ்பெஷலாக வருகிறது கத்தி.


Click it and Unblock the Notifications











