கத்தி படத்தில் நடிக்க வேண்டாம்... சிரஞ்சீவிக்கு கோரிக்கை விடுத்த தஞ்சை மக்கள்

By Manjula

சென்னை: கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க வேண்டாம் என்று தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிக்கு தஞ்சை சுற்றுவட்டார கிராம மக்கள் கடிதங்கள் மூலம் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.

தஞ்சை மாவட்டம் இளங்காடு கிராமத்தில் வசிக்கும் அன்பு ராஜசேகர் தான் இயக்கிய 'தாகபூமி' குறும்படத்தை தழுவி இயக்குநர் முருகதாஸ் கத்தி திரைப்படத்தை எடுத்திருப்பதாக தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கொன்றை சமீபத்தில் தொடர்ந்தார்.

Vijay's Kaththi Telugu Remake Issue

கத்தி திரைப்படத்தின் இயக்குநர் முருகதாஸ், தயாரிப்பாளர்கள் கருணாகரன், சுபாஷ்கரன், ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் சி.வில்லியம்ஸ் மற்றும் நடிகர் விஜய் உள்ளிட்டோர் மீது தஞ்சை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது.

மேலும், கத்தி படத்தை வேறு மொழியில் ரீமேக் செய்வதற்கு தடை கேட்டும் நீதி மன்றத்தில் 4 வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.இந்நிலையில் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் சிரஞ்சீவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின.

இதனைக் கேள்விப்பட்ட தஞ்சை இளங்காடு மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் கத்தி படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நீங்கள் நடிக்க வேண்டாம் என்று தொடர்ந்து அவருக்கு கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

மேலும் இயக்குநர் முருகதாஸுக்கு எதிராக தஞ்சை மாவட்டம் முழுவதும் ‘கையெழுத்து இயக்கம்' தொடங்க உள்ளதாகவும் இளங்காடு கிராம மக்கள் தெரிவித்துள்ளனர

புலி படத்தின் வெளியீட்டிற்கு முதல்நாள் கத்தி விவகாரம் பூதாகரமாக உருவெடுத்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X