தீபாவளிக்கு ‘கத்தி’ கன்பார்ம்!
சென்னை: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகியுள்ள கத்தி படம் தீபாவளிக்கு ரிலீசாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் கத்தி. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடித்துள்ளார். இத்திரைப்படத்திற்கு எதிர்ப்பார்ப்புகளைப் போலவே எதிர்ப்பும் அதிகளவில் கிளம்பியுள்ளது.
இதனால், இப்படம் வரும் தீபாவளிக்கு ரிலீசாகுமா என்பதில் குழப்பம் நிலவியது. இந்நிலையில், கத்தி படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனம் இப்படம் வரும் தீபாவளிக்கு திரைக்கு வரும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது தொடர்பாக இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் லைகா பட நிறுவனர் சுபாஷ் கரண் தெரிவித்ததாவது :-

போலியான படம்...
லைகாவிற்கும், இலங்கை அதிபர் ராஜபக்சேவிற்கு எந்தத் தொடர்பும் இல்லை. காமன்வெல்த்தில் லைகா படம் உள்ளதாக வெளியான தகவல் உண்மையில்லை.

சுய விளம்பரம்...
சில தமிழ் அமைப்புகள் தங்களது சுய விளம்பரத்திற்காக கத்திப் பட பிரச்சினையை பெரிதாக்குகின்றன. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தமிழ் அமைப்புகளிடம் விளக்கம் அளிக்கத் தயார்.

தீபாவளி ரிலீஸ்...
கத்தி படத்தை வேறு நிறுவனத்திடம் விற்கும் பேச்சுக்கே இடமில்லை. இப்படம் நிச்சயமாக வரும் தீபாவளிக்கு ரிலீசாகும்' என இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆடியோ ரிலீஸ்...
இதற்கிடையே இப்படத்தின் ஆடியோ ரிலீஸ் வரும் 18ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகள் துரிதகதியில் நடைபெற்று வரும் நிலையில், விழாவில் கலந்து கொள்ளவிருக்கும் சிறப்பு விருந்தினர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் அறிவிக்கப் படும் என எதிர்பார்க்கப் படுகிறது.


Click it and Unblock the Notifications











