VIjay's Leo - விஜய் கேரியரில் இப்படி நடப்பது இதுதான் முதல்முறையாம்

சென்னை: VIjay's Leo (விஜய்யின் லியோ) லியோ படம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளது.

மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் என நான்கு படங்களையுமே ஹிட் படங்களாக கொடுத்தவர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். இதில் விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது. அந்தப் படத்தின் வெற்றி மூலம் இந்திய அளவில் கவனிக்கப்படும் இயக்குநர் என்ற பெயரை பெற்றார் லோகேஷ் கனகராஜ். அதுமட்டுமின்றி கேஜிஎஃப், புஷ்பா, ஆர்.ஆர்.ஆர் என வேற்று மொழி படங்கள் தமிழ்நாட்டில் அதிகம் ஹிட்டான சூழலில் விக்ரமின் வெற்றி தமிழ் சினிமாவின் வெற்றியாகவே கருதப்பட்டது.

Vijays Leo Is a High budget film in his career says bismi

விஜய்யுடன் மீண்டும் இணைந்த லோகேஷ்: விஜய் கடைசியாக வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார். பைலிங்குவலாக தமிழ் மற்றும் தெலுங்கில் உருவான அந்தப் படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இதனையடுத்து தனது கேரியரில் மெகா ஹிட்டுகளில் ஒன்றான மாஸ்டர் படத்தை இயக்கிய லோகேஷ் கனகராஜுடன் இணைந்திருக்கிறார் விஜய். இவர்கள் இருவரும் இரண்டாவது முறை இணையும் படத்துக்கு லியோ ப்ளடி ஸ்வீட் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ரசிகர்களை கவர்ந்த லியோ ப்ரோமோ: விக்ரம் படம் போலவே இந்தப் படத்திற்கான டைட்டிலையும் ப்ரோமோவுடன் வெளியிட்டார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். காஷ்மீரில் சாக்லேட் ஃபேக்டரி வைத்திருக்கும் விஜய்யை தேடி ஒரு கும்பல் வருவதுபோல் அந்த ப்ரோமோவில் காட்சிகள் இருந்தன. இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. பான் இந்தியா படமாக உருவாகும் லியோவில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மாத்யூ தாமஸ், மிஷ்கின், மன்சூர் அலிகான், த்ரிஷா, ப்ரியா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்திருக்கின்றனர்.

Vijays Leo Is a High budget film in his career says bismi

காஷ்மீரில் நடந்த ஷூட்டிங்; இப்போது சென்னையில்: இப்படத்தின் ஷூட்டிங்கிற்காக சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீருக்கு சென்றது படக்குழு. அங்கு விறுவிறுப்பாக ஷூட்டிங் நடந்துவந்தது. கிட்டத்தட்ட் 2 மாதங்கள் அங்கு முகாமிட்டிருந்த படக்குழு கடந்த வாரத்தில்தான் ஷூட்டிங்கை முடித்துவிட்டு சென்னைக்கு திரும்பியது. தற்போது லியோ படத்தின் ஷூட்டிங் சென்னையில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. மேலும் படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங்கையும் சென்னையில் முடிக்கவே படக்குழு திட்டமிட்டும் இருக்கிறது.

விஜய் கேரியரில் இதுதான் முதல்முறை: இந்நிலையில் பத்திரிகையாளர் பிஸ்மி லியோ படம் குறித்து தகவல் ஒன்றை பகிர்ந்திருக்கிறார். அவர் தனது யூட்யூப் சேனலில் பேசுகையில், 'லியோ' படம் அதிக பட்ஜெட்டில் உருவாகிவருகிறது. அதாவது 350 கோடியிலிருந்து 375 கோடி பட்ஜெட்டில் 'லியோ' படம் தயாராகிறது. விஜய்யின் கேரியரில் இப்படி அதிக பட்ஜெட்டில் படம் உருவாவது இதுவே முதல்முறை. ஏறக்குறைய காஷ்மீர் ஷெட்யூலுக்காக அதிக செலவு செய்யப்பட்டிருக்கிறது" என்றார்.

லியோ படத்தின் அசத்தல் வியாபாரம்: இதற்கிடையே லியோ படத்தின் வியாபாரம் குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளியாகின. சில வாரங்களுக்கு முன்பு லியோ படத்தை டப்பிங் செய்து ஓடிடியில் வெளியிடும் உரிமையை நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனம் 76 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியிருப்பதாக தகவல் வெளியானது. அதேபோல், லியோ படத்தின் வெளிநாட்டு உரிமை 60 கோடி ரூபாய்க்கு வியாபாரம் ஆகியிருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X