தளபதி 67 விஜய்க்கு மட்டும் இல்லை... த்ரிஷாவுக்கும் ரொம்பவே ஸ்பெஷல் தானாம்!: ஏன்னு தெரியுமா?

சென்னை: வாரிசு படத்தைத் தொடர்ந்து விஜய் தனது 67வது படத்தில் நடித்து வருகிறார்.

முதலில் தளபதி 67 என்ற டைட்டிலில் அப்டேட் வெளியான நிலையில் தற்போது இந்தப் படத்தின் தலைப்பு லியோ என படக்குழு அறிவித்தது.

லியோ படத்தில் விஜய்யுடன் த்ரிஷாவும் லீடிங் கேரக்டரில் நடித்து வருகிறார்.

விஜய்யின் லியோ படத்தில் த்ரிஷாவும் இணைந்ததற்கான காரணம் என்னவென்று தற்போது வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.

 தளபதி 67ல் த்ரிஷா

தளபதி 67ல் த்ரிஷா

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள தளபதி 67 படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் டைட்டில் ப்ரோமோ இருதினங்களுக்கு முன்னர் வெளியானது. அதன்படி இந்தப் படத்துக்கு லியோ என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே லியோ படத்தில் த்ரிஷாவும் விஜய்யுடன் நடிக்கவுள்ளார். குருவி படத்திற்கு பின் 14 ஆண்டுகள் கழித்து விஜய் - த்ரிஷா ஜோடி இந்தப் படத்தில் இணைந்துள்ளது. லியோ பட பூஜையில் த்ரிஷாவும் க்யூட்டாக கலந்துகொண்ட வீடியோ வைரலானது.

 த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல்

த்ரிஷாவுக்கும் ஸ்பெஷல்

14 ஆண்டுகளுக்குப் பின்னர் லியோ திரைப்படத்தில் விஜய் - த்ரிஷா ஜோடி இணைந்துள்ளது ரசிகர்களுக்கும் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. 2002ம் ஆண்டு வெளியான மெளனம் பேசியதே படத்தில் சூர்யாவுடன் நடித்து சினிமாவில் அறிமுகமானார் த்ரிஷா. அதனைத் தொடர்ந்து விஜய்யுடன் கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, அஜித்துடன் ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் படங்களில் நடித்துள்ளார். மேலும் ரஜினி, கமல், விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி உள்ளிட்ட டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டுள்ளார். கடந்தாண்டு வெளியான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து கம்பேக் கொடுத்த த்ரிஷாவுக்கு, லியோ 67வது படமாக அமைந்துள்ளது.

 தளபதி 67 - த்ரிஷா 67

தளபதி 67 - த்ரிஷா 67

லியோ விஜய்க்கு 67வது படமாக அமைந்தது மட்டும் இல்லாமல், தற்போது த்ரிஷாவுக்கும் 67வது திரைப்படம் என்பது உறுதியாகியுள்ளது. இதனை த்ரிஷா ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தமிழ்த் திரையுலகில் விஜய் - த்ரிஷா ஜோடிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. கில்லி படத்தில் இருவரும் ஆட்டம் போட்ட 'அப்படிப் போடு' பாடல் இன்றும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது. இந்நிலையில், இவர்களது 67 படத்தில் இருவரும் சேர்ந்து நடிப்பது ஷாக்கிங் சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது.

 ட்ரெண்டிங்கில் த்ரிஷா 67

ட்ரெண்டிங்கில் த்ரிஷா 67

இதனையடுத்து த்ரிஷா 67 என அவரது ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். லியோ படத்தில் விஜய் - த்ர்ஷாவுடன் ப்ரியா ஆனந்த், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், அர்ஜுன், மன்சூர் அலிகான், இயக்குநர்கள் மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ் ஜார்ஜ் மரியன், ஏஜெண்ட் டினாவாக பிரபலமான டான்ஸர் வசந்தி உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைத்து வரும் லியோ படத்தின் ஷூட்டிங் காஷ்மீரில் நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X