விஜய்யின் லியோவுக்கு வந்த சோதனை... கார்னர் செய்த கமல், அட்லீ... அப்போ அந்த 1000 கோடி வசூல்..?
சென்னை: விஜய் தற்போது லோகேஷ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
மல்டி ஸ்டார்ஸ் படமாக பிரம்மாண்டமாக உருவாகும் லியோ ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது.
லியோ டைட்டில் அப்டேட் கொடுக்கும் போதே படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு அறிவித்திருந்தது.
இப்போது அதுவே லியோவின் பாக்ஸ் ஆபிஸ் வசூலுக்கு மிகப் பெரிய சிக்கலாக உருவாகியுள்ளதாம்.

வாரிசு - துணிவு பாக்ஸ் ஆபிஸ்
விஜய்யின் வாரிசு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக ஜனவரி 11ம் தேதி வெளியானது. வம்ஷி பைடிப்பள்ளி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியான இந்தப் படம் 300 கோடிக்கும் மேல் வசூலித்தது. இன்னொரு பக்கம் அஜித் நடித்த துணிவு திரைப்படமும் அதே நாளில் ரிலீஸானது. இந்தப் படமும் பாக்ஸ் ஆபிஸில் 300 கோடி ரூபாய்க்கும் மேல் கலெக்ஷன் செய்திருந்தது. முதலில் விஜய்யின் வாரிசு மட்டுமே பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் அஜித்தின் துணிவும் ரிலீஸாகி வாரிசு படத்தின் வசூலை சிதறடித்தது.

லியோவுக்கு வரும் சிக்கல்
ஒருவேளை பொங்கல் ஸ்பெஷலாக விஜய்யின் வாரிசு மட்டும் வெளியாகி இருந்தால், பாக்ஸ் ஆபிஸில் தனியாக கெத்து காட்டியிருக்கும். இதனால், 500 கோடிகளுக்கும் மேல் வசூலித்திருக்கும் என பாக்ஸ் ஆபிஸ் வட்டாரங்கள் தெரிவித்து இருந்தன. இதேநிலை தான் தற்போது விஜய்யின் லியோ படத்துக்கும் ஏற்படவுள்ளதாம். விஜய் - லோகேஷ் கூட்டணி இணைகிறது என அப்டேட் வெளியானதில் இருந்தே, லியோ திரைப்படம் கண்டிப்பாக ஆயிரம் கோடி வசூலிக்கும் என சினிமா விமர்சகர்கள் கூறிவந்தனர்.

கார்னர் செய்த கமல், ஷாருக்கான்
அதனால் தான் மற்ற படங்களுக்கு வார்னிங் செய்யும்படி லியோவின் ரிலீஸ் தேதியுடன் டைட்டில் டீசர் வெளியானது. அதன்படி இந்தப் படம் ஆயுத பூஜையை முன்னிட்டு அக்டோபர் 19ம் தேதி வெளியாகிறது. தொடர்ச்சியாக 6 நாட்கள் விடுமுறை இருப்பதால் தான் தீபாவளி ரேஸை விட்டுவிட்டு ஆயுத பூஜை ரிலீஸுக்கு ரெடியாகிறது லியோ. இப்போது அதற்கும் வேட்டு வைக்க போகிறார்களாம் கமலும் ஷாருக்கானும். கமல் - ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இந்தியன் 2 ஷூட்டிங் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது.

போட்டியாக வெளியாகும் இந்தியன் 2, ஜவான்
இந்தியன் 2 ஜூன் மாதம் வெளியாகும் என சொல்லப்பட்டது. ஆனால், தற்போது இந்தப் படமும் ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீஸாகலாம் என சொல்லப்படுகிறது. அதேபோல், ஷாருக்கானின் ஜவான் ஜூன் 2ம் தேதி வெளியாகவிருந்தது. ஆனால், இன்னும் படப்பிடிப்பு முடிவடையாததால் அதன் ரிலீஸ் தேதியும் தள்ளிப் போகிறதாம். அதன்படி இந்தப் படத்தையும் ஆயுத பூஜை விடுமுறையில் களமிறக்க அட்லீ முடிவு செய்துள்ளாராம். இந்தியன் 2, ஜவான் படங்களும் ஆயுத பூஜை ஸ்பெஷலாக வெளியானால், லியோ வசூல் முற்றிலும் அடிவாங்கும் என சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு
விஜய்யின் லியோ, கமலின் இந்தியன் 2, ஷாருக்கானின் ஜவான் என மூன்றுமே பிரம்மாண்டமாக உருவாகி வருகின்றன. மேலும், ரசிகர்களிடமும் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. இதனால், லியோ, இந்தியன் 2, ஜவான் மூன்று படங்களும் ஒரேநாளில் வெளியானால் அது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. முக்கியமாக இந்த மூன்று படங்களுக்குமே அனிருத் தான் இசையமைத்து வருவகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே லியோ திரைப்படம் 1000 கோடி வசூலிக்கும் என கூறிவந்த விமர்சகர்கள், இப்போது இது சந்தேகமே என கை விரித்துவிட்டனர்.


Click it and Unblock the Notifications











