Vijay: லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்... ஆரம்பமே அதகளம் தான்... விஜய்க்கு கேரளாவில் இப்படியும் ரசிகர்களா?

சென்னை: விஜய்யின் லியோ படப்பிடிப்பு சென்னையில் வேகமாக நடைபெற்று வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

விஜய்யுடன் த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன் என ஏராளமான நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில் லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸ் பற்றி செம்ம ஹாட்டான அப்டேட் கிடைத்துள்ளது.

 Vijays Leo Kerala theater rights will be sold for Rs 15 crore

லியோ ப்ரீ ரிலீஸ் பிசினஸ்:கோலிவுட்டின் வசூல் மஸ்டராக கலக்கி வருகிறார் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வரும் விஜய், அடுத்து தளபதி 68 படத்திலும் கமிட் ஆகியுள்ளார். பீஸ்ட் முதல் தொடர்ச்சியாக ரெஸ்ட் எடுக்காமல் படங்களில் நடித்து வருகிறார் விஜய். இதனால், விஜய் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் செம்மையாக கலெக்‌ஷன் செய்து வருகிறது.

இந்தாண்டு பொங்கலுக்கு வெளியான வாரிசு 300 கோடி வசூலித்தது. அதேவேகத்தில் லியோ திரைப்படமும் இந்தாண்டு இறுதியில் வெளியாகவுள்ளது. ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய விஜய் - லோகேஷ் கூட்டணி, லியோவிலும் சம்பவம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானது முதலே லியோ படத்திற்கு ஹைப் கூடிக்கொண்டே வருகிறது.

விஜய், த்ரிஷா, ப்ரியா ஆனந்த், சஞ்சய் தத், அர்ஜுன், மிஷ்கின், கெளதம் மேனன், சாண்டி மாஸ்டர், மேத்யூ தாமஸ், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில், மிகப் பெரிய மல்டி ஸ்டார்ஸ் படமாக லியோ உருவாகி வருகிறது. அதுமட்டும் இல்லாமல் லோகேஷ் யுனிவர்ஸ் கான்செப்ட்டில் உருவாகி வருவதால் ரசிகர்களும் செம்ம எக்ஸைட்மெண்ட்டில் உள்ளனர். அதன் காரணமாக லியோ படத்தின் ப்ரீ ரிலீஸ் பிஸினஸும் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளதாம்.

 Vijays Leo Kerala theater rights will be sold for Rs 15 crore

முக்கியமாக லியோ படத்திற்காக தமிழ்நாட்டை விட கேரளா ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கிறார்களாம். இதனைப் பார்த்த கேரள விநியோகஸ்தர்கள் லியோ படத்தின் உரிமையை எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என இப்போதே டீலிங்கை ஆரம்பித்துவிட்டார்களாம். அதன்படி, லியோ படத்தின் கேரளா தியேட்டர் ரைட்ஸுக்கு 15 கோடி ரூபாய் வரை கொடுக்க கடும் போட்டி காணப்படுகிறதாம்.

அதேபோல், லியோ ஆடியோ ரைட்ஸும் 15 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படத்திற்காக அனிருத் இசையில் மொத்தமே 3 பாடல்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், தீம் மியூசிக்கும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் லியோ ஆடியோ ரைட்ஸ் 15 கோடி ரூபாய் வரை விற்பனையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X