Leo : மே 5ல் துவங்கும் லியோ படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்.. யாரெல்லாம் கலந்துக்குறாங்க தெரியுமா?

சென்னை : விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்துவரும் படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிவருகிறார்.

இந்தப் படத்தின் சூட்டிங் 50 நாட்களை கடந்து காஷ்மீரில் நடந்து முடிந்த நிலையில், தற்போது சென்னையில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளது.

அடுத்தக்கட்ட சூட்டிங் மே மாதம் 5ம் தேதி சென்னையில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Vijays Leo movie next schedule in chennai starts on 5th of May

லியோ படத்தின் சென்னை சூட்டிங் : நடிகர்கள் விஜய், த்ரிஷா 13 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. இந்தப் படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடித்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், தங்களது மனதிற்கு பிடித்த ஹீரோவான விஜய்யை, இதுபோன்ற அதிரடி ஆக்ஷன் கேரக்டரில் பார்க்க ரசிகர்கள் மரண மாஸ் வெயிட்டிங்கில் உள்ளனர். இந்தப் படம் குறித்த அறிவிப்பு கடந்த பிப்ரவரி மாதத்தில் வெளியிடப்பட்டு டைட்டில் டீசரும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இதையடுத்து காஷ்மீரில் தொடர்ந்து கடுமையான பனிப்பொழிவிற்கிடையில் 50 நாட்கள் சூட்டிங்கை படக்குழுவினர் முடித்துவிட்டு சென்னை திரும்பினர். காஷ்மீரில் படக்குழுவினர் பட்ட இன்னல்களையும் வீடியோவாக வெளியிட்டனர். விஜய்யின் சூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்நிலையில் சென்னையில் அடுத்தக்கட்ட சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளது.

வரும் மே மாதம் 5ம் தேதி படத்தின் சூட்டிங் சென்னையில் துவங்கவுள்ளதாக படக்குழு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சூட்டிங் ஒரு மாதம் நீடிக்கவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த சூட்டிங்கில் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பொன்னியின் செல்வன் ப்ரமோஷன்களில் பிசியாக இருந்த த்ரிஷா, சென்னையில் இந்த சூட்டிங்கில் இணையவுள்ளார்.

Vijays Leo movie next schedule in chennai starts on 5th of May

இந்தப் படத்திற்காக பிரம்மாண்டமான அளவில் பாடல் சூட்டிங் எடுக்கப்படவுள்ளதாகவும், அனிருத் இசையில் படத்தின் பாடல் மிகச்சிறப்பாக அமையும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் பாடலுக்காக 10 நாட்கள் தொடர்ந்து ரிகர்சல் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் இதையடுத்து தொடர்ந்து 10 நாட்கள் பாடல் சூட்டிங் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் படத்தின் கிராபிக்ஸ் வேலைகளும் பெரிய அளவில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அளவில் கிராபிக்ஸ் வேலைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் ஜூலை மாதத்தில் நிறைவடையவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. திட்டமிட்டபடி அக்டோபர் மாதத்தில் படத்தை ரிலீஸ் செய்யும் வகையில், படத்தின் ஒவ்வொரு விஷயத்தையும் திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறார் லோகேஷ் கனகராஜ். விரைவில் படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களை எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X