காஷ்மீரில் லியோ படத்தின் விறுவிறு சூட்டிங்.. எத்தனை நாள் நடக்குதுன்னு தெரிஞ்சிக்கலாங்களா?

ஸ்ரீநகர் : நடிகர் விஜய்யின் வாரிசு படத்தின் கொண்டாட்டங்கள் நிறைவடைவதற்கு முன்னதாகவே தளபதி 67 படத்தின் சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

கடந்த வாரத்தில் படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை உற்சாகத்திற்கு உள்ளாக்கியது.

இதனிடையே காஷ்மீரில் கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 நடிகர் விஜய்யின் தளபதி 67

நடிகர் விஜய்யின் தளபதி 67

நடிகர் விஜய் கேங்ஸ்டராக நடிக்கும் தளபதி 67 படத்தின் சூட்டிங் கடந்த வாரத்தில் காஷ்மீரின் ஸ்ரீநகரில் துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக வாரிசு படத்தின் கொண்டாட்டங்கள் நிறைவடைவதற்கு முன்னதாகவே தளபதி 67 படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்பட்டு, நடிகர், நடிகைகள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு செய்யப்பட்டது.

 காஷ்மீர் சென்ற படக்குழு

காஷ்மீர் சென்ற படக்குழு

தளபதி 67 படத்தில் திரிஷா, பிரியா ஆனந்த், சஞ்சய் தத், கௌதம் மேனன், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் இணைந்த நிலையில், இவர்கள் அனைவரும் சூட்டிங்கிற்காக தனிவிமானம் மூலம் ஸ்ரீநகருக்கு புறப்பட்டு சென்றனர். அங்குள்ள சூழல் உள்ளிட்டவை குறித்தெல்லாம் முன்னதாகவே திட்டமிடப்பட்டு சூட்டிங் துவங்கி நடைபெற்று வருகிறது.

சென்னை திரும்பிய த்ரிஷா

சென்னை திரும்பிய த்ரிஷா

மற்ற நடிகர், நடிகைகளுடன் இணைந்து விமானம் மூலம் தளபதி 67 படத்தின் சூட்டிங்கிற்காக ஸ்ரீநகர் புறப்பட்டு சென்ற படத்தின் நாயகி த்ரிஷா, இடையில் சென்னை திரும்பினார். இதனால் டைரக்டருடன் அவருக்கு மனஸ்தாபம் ஏற்பட்டதாகவும் அதனால்தான் அவர் சென்னை திரும்பியதாகவும் தகவல்கள் வெளியாகின.

த்ரிஷா விலகவில்லை

த்ரிஷா விலகவில்லை

ஆனால் இதனை த்ரிஷாவின் அம்மா உமா மறுத்துள்ளார். மற்ற நடிகர்களின் சூட்டிங் நடைபெற்றதால்தான், த்ரிஷா அந்த கேப்பை பயன்படுத்திக் கொண்டு சென்னை திரும்பியதாக அவர் தெரிவித்துள்ளார். இதனிடையே, இன்றைய தினம் மீண்டும் த்ரிஷா சூட்டிங்கிற்காக ஸ்ரீநகர் புறப்பட்டு சென்றுள்ளார். அவர் மீண்டும் விஜய்யுடன் சூட்டிங்கில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

500 தொழிலாளர்கள் வேலை

500 தொழிலாளர்கள் வேலை

இதனிடையே தளபதி 67 படத்தின் சூட்டிங் அதிகமான அளவில் அதாவது 60 நாட்கள் சூட்டிங் ஸ்ரீநகரில் நடைபெறவுள்ளதாக படக்குழு தரப்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது. தினந்தோறும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இந்தப் படப்பிடிப்பிற்காக உழைத்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

காஷ்மீரில் அதிகபட்ச சூட்டிங்

காஷ்மீரில் அதிகபட்ச சூட்டிங்

படத்தின் அதிகப்பட்ச சூட்டிங் காஷ்மீரில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூட்டிங்கை முழுவீச்சில் நடத்திவிட்டு சென்னை திரும்பும் படக்குழு சில தினங்கள் இடைவெளிக்குப் பிறகு மீண்டும் அடுத்தக்கட்ட சூட்டிங்கை திட்டமிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X