Leo :விஜய்க்கு அடுத்தபடியாக லியோ படத்தில் கெத்து காட்டும் கேரக்டர்.. சூப்பர் அப்டேட் இதோ!
சென்னை : நடிகர் விஜய், த்ரிஷா உள்ளிட்டவர்கள் நடிப்பில் உருவாகிவரும் லியோ படத்தின் சூட்டிங் தற்போது விறுவிறு சுறுசுறுவென நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியையும் அறிவித்துவிட்டுதான் லோகேஷ் கனகராஜ் சூட்டிங்கிற்கே போனார் என்பதால், ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்துடன் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர்.
அடுத்ததாக சென்னையில் இந்தப் படத்தின் சாங் சூட்டிங் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

லியோ படத்தில் கெத்து கேரக்டர் :லியோ படம்தான் அடுத்ததாக கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய புதிய படமாக அமைந்துள்ளது. விஜய்யின் படங்களில் கதைக்களம் சிறப்பாக அமையவில்லை என்றபோதிலும் அந்தப் படத்தை மாஸ் படமாக, மிகச்சிறந்த வெற்றிப்படமாக ரசிகர்கள் மாற்றி விடுவார்கள். ஆனால் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை இயக்கிவரும் லோகேஷின், இந்தப் படம் மிகச்சிறந்த நம்பிக்கையையும் எதிர்பார்ப்பையும் ரசிகர்களிடையே கொடுத்துள்ளது.
இந்தப் படத்தின் அறிவிப்பிற்காக ரசிகர்கள் நீண்ட காலங்களாக காத்திருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதத்தில் படத்தின் டைட்டிலை சிறப்பான வீடியோவுடன் வெளியிட்ட படக்குழு, படத்தின் நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டதுடன், காஷ்மீர் சூட்டிங்கையும் அறிவித்து தனி விமானத்தில் காஷ்மீர் பறந்தனர். அங்கு தொடர்ந்து கடுமையான குளிரில் 50 நாட்கள் சூட்டிங்கை முடித்துக் கொண்டு சென்னை திரும்பியுள்ளனர்.
இங்கும் அடுத்தடுத்து சூட்டிங்கை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை சூட்டிங்கில் சஞ்சய் தத், அர்ஜுன் உள்ளிட்டவர்கள் பங்கேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகின. தற்போது பொன்னியின் செல்வன் பிரமோஷனலில் பிசியாக இருந்த த்ரிஷா, வரும் 1ம் தேதி முதல் படத்தின் சூட்டிங்கில் இணையவுள்ளார். இதனிடையே வரும் மே மாதம் 20ம் தேதி முதல் படத்தின் சாங் சூட்டிங்கிற்கான ரிகர்சல் நடைபெறவுள்ளது. தொடர்ந்து 10 நாட்கள் இந்த ரிகர்சல் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ள இந்தப் பாடல் ஜூன் 2ம் தேதி முதல் தொடர்ந்து 10 நாட்கள் சூட்டிங் எடுக்கப்பட உள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள கேரக்டர் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இந்தப் படத்தில் விஜய்க்கு அடுத்தபடியாக சிங்கம் ஒன்றை நடிக்க வைத்திருக்கிறார்களாம். இந்த சிங்கத்தை அனிமேஷன் செய்ய 15 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சிங்கத்தின் காட்சிகள் வெறித்தனமாக அமைந்திருக்கும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
லியோ படத்தில் அதிகமான பல சர்ப்பிரைஸ்கள் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. 13 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படத்தில் விஜய்யுடன் த்ரிஷா இணைந்துள்ளார். இதேபோல இந்தப் படத்தில் கேங்ஸ்டராக விஜய் நடித்து வருவதாகவும் அவருடன் 6 வில்லன்கள் மோதவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை இல்லாதவகையில், இந்தப் படத்தின் பாடல் ஒன்று பிரம்மாண்டமாக படமாக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











