லியோ அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்க, எப்போன்னு தெரியுமா... விஜய்யுடன் மோதவிருக்கும் பிரபலம்!
சென்னை: வாரிசு படத்தைத் தொடர்ந்து லியோ ஷூட்டிங்கில் பிஸியாக இருக்கிறார் விஜய்.
லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் விஜய் கேங்ஸ்டராக நடிப்பதாக சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த இரண்டு மாதங்களாக காஷ்மீரில் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து லியோவின் அடுத்தக்கட்ட ஷூட்டிங் எங்கே, எப்போது என்ற ஸ்பெஷல் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
லியோ ஷூட்டிங் அப்டேட்
கோலிவுட் ரசிகர்களிடம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள திரைப்படம் லியோ. விஜய் - லோகேஷ் கூட்டணி இரண்டாவது முறையாக இணைந்துள்ள இந்தப் படத்தை, 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது. இரு மாதங்களுக்கு முன்னர் காஷ்மீரில் தொடங்கிய லியோ ஷூட்டிங் சில தினங்களுக்கு முன்னர் முடிவுக்கு வந்தது.
இதனைத் தொடர்ந்து லியோ அடுத்தக்கட்ட படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும், இனிமேல் அவுட்டோர் ஷூட்டிங் கிடையாது என்றும் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், லியோ படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சென்னையில் தொடங்க உள்ளாராம் லோகேஷ் கனகராஜ். அதன்படி இந்த ஷெட்யூல் மே மாதம் முதல் வாரம் தொடங்கும் என தெரிகிறது.
அதேபோல், சென்னையில் நடைபெறும் ஷெட்யூல் முழுவதும் விஜய், த்ரிஷா, சஞ்சய் தத் சம்பந்தப்பட்ட காட்சிகள் மட்டுமே படமாக்கப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. காஷ்மீரில் நடைபெற்ற படப்பிடிப்பில் கலந்துகொள்ள விஜய், த்ரிஷா இருவரும் லியோ படக்குழுவினருடன் ஒரே விமானத்தில் பறந்தனர். பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்தும் காஷ்மீர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார்.
இந்நிலையில், சென்னையிலும் சஞ்சய் தத் போர்ஷன் படமாக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது. காஷ்மீரில் இரண்டு நாட்கள் மட்டுமே படப்பிடிப்பில் கலந்துகொண்ட சஞ்சய் தத், சென்னையில் பல நாட்கள் தங்கியிருந்து நடிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. சென்னையில் ஒரு மாதம் படப்பிடிப்பு நடத்தவும் லோகேஷ் கனகராஜ் திட்டமிட்டுள்ளாராம். இதனைத் தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பும் விரைவில் தொடங்கும் என சொல்லப்படுகிறது.
இதனிடையே விக்ரம் படத்தின் ப்ரீக்வெல்லாக லியோ உருவாகி வருகிறதா என்றும் எதிர்பார்க்க வைத்துள்ளது. விக்ரம் படத்தில் நடித்த மாயா கிருஷ்ணனும் லியோவில் இணைந்துள்ளார். லியோ ஷூட்டிங் ஸ்பாட்டில் மாயா கிருஷ்ணனும் கெளதம் மேனனும் எடுத்துக்கொண்ட செல்ஃபி சில தினங்களுக்கு முன்னர் வைரலானது. விக்ரம் படத்தில் இரண்டு காட்சிகளில் மாயா கிருஷ்ணன் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











