இப்படியொரு வெறித்தனமான விஜய் ரசிகனா...? - செம வைரலாகும் வீடியோ!

By Vignesh Selvaraj

Recommended Video

பயங்கரமான விஜய் ரசிகனா இருப்பான் போல- வீடியோ

சென்னை: நடிகர் விஜய்க்கு இளைஞர்கள், குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் வரை அனைத்து வயதிலுள்ளவர்களும் ரசிகர்களாக இருக்கிறார்கள்.

முருகதாஸ் இயக்கும் விஜய் 62 படத்தில் தற்போது நடித்து வருகிறார் விஜய். இப்படத்தின் ஷூட்டிங் சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், விஜய் ரசிகனாக இருக்கும் சிறுவன் ஒருவன் விஜய்யைப் பற்றி அவனது அம்மாவிடம் பேசிக்கொண்டிருக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகத் திகழ்பவர் இளையதளபதி விஜய், இவருக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எண்ணிலடங்காத ரசிகர்கள் உள்ளனர். அதிலும், இவருக்கு குறிப்பாக குழந்தைகள் ரசிகர்கள் மிக அதிகம்.

வெறித்தன ரசிகன்

வெறித்தன ரசிகன்

இந்நிலையில், விஜய்யின் தீவிர ரசிகனாக இருக்கும் சிறுவன் ஒருவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிக்கொண்டு இருக்கிறது. அச்சிறுவன் அந்த வீடியோவில், விஜய்யை சார் என்று அழைக்க வேண்டும் என்று தனது அம்மாவிடம் கூறுகிறான்.

விஜய் பற்றி

விஜய் பற்றி

4 + 4 என்ன எனக் கேட்டால் யோசிக்கும் அந்தச் சிறுவன், விஜய் படங்களைப் பற்றிய அப்டேட்களை விரல்நுனியில் வைத்திருக்கிறான். இந்த தகவல்களையெல்லாம் யார் சொல்லிக் கொடுத்தது எனக் கேட்டால் அப்பாதான் எனச் சொல்கிறான். திட்டமிட்டே இந்த வீடியோவை எடுத்திருந்தாலும் பார்ப்பதற்கு க்யூட்டாக இருக்கிறது.

துப்பாக்கி

துப்பாக்கி

'துப்பார்க்கு' எனத் தொடங்கும் திருக்குறள் படிக்க சொன்னால் விஜய்யின் துப்பாக்கி படத்தையே திரும்பத் திரும்பச் சொல்கிறான். ஒரு திருக்குறளுக்கு இம்புட்டு அக்கப்போரா என இந்த வீடியோவை பார்த்தவர்கள் கமென்ட் செய்து வருகிறார்கள்.

விஜய்யின் குட்டி ரசிகன்

விஜய்யின் குட்டி ரசிகன்

வருங்காலத்தில் என்னவாக ஆகவேண்டும் என்று கேட்டால், மெர்சல் படத்தில் வருவதுபோல், டாக்டர், மேஜிக்மேன் மற்றும் ஹீரோ என மூன்றாகவும் ஆகப்போவதாக கூறி அனைவரையும் அசத்துகிறான். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X