“நான் சத்தியமா விஜய் 63ல் நடிக்கிறேன்”... மேடையில் ரகசியத்தை உடைத்த பிரபல நடிகர்!
விஜய் 63ல் நடிகர் விவேக்கும் நடிக்க இருக்கிறார்.
Recommended Video

சென்னை: அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிகர் விவேக் நடிக்க இருப்பது தெரிய வந்துள்ளது.
சர்கார் படத்தைத் தொடர்ந்து அட்லி இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை விஜய் 63 எனப் படக்குழுவினரும், ரசிகர்களும் குறிப்பிடுகின்றனர்.
சமீபத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது. இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

வதந்திகள்:
இந்த படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் பற்றிய அறிவிப்பு இன்னமும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவில்லை. இதனால், இவர் தான் ஹீரோயின், இவர் தான் காமெடியன் என பல வதந்திகள் சமூகவலைதளங்களில் உலா வருகின்றன.

விவேக்:
இந்நிலையில், இப்படத்தின் காமெடியன் யார் என்பது மட்டும் தற்போது உறுதியாகியுள்ளது. ஆம், விஜய் 63ல் காமெடி நடிகர் விவேக் நடிக்க இருக்கிறார். இதனை சமீபத்தில் கலந்து கொண்ட விழா ஒன்றில் அவரே தெரிவித்துள்ளார்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு:
இது தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு அவர், "நான் சத்தியமாக விஜய்63ல் நடிக்கிறேன்" எனப் பதிலளித்துள்ளார். இந்தப் படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக இப்போதே அறிவித்து விட்டது குறிப்பிடத்தக்கது.

மகிழ்ச்சி:
விஜயுடன் ஏற்கனவே பல வெற்றிப் படங்களில் விவேக் சேர்ந்து நடித்துள்ளார். அவர்களுக்கு இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே, விஜய் 63 படத்தில் விவேக் நடிக்க இருப்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











