'மாஸ்டர்' ஆடியோ ரிலீஸ் எப்போது? அரசியல் ஸ்டோரி சொல்வாரா அதகள விஜய்? ஆசையாய் எதிர்பார்க்கும் ஃபேன்ஸ்

By

சென்னை: மாஸ்டர் படத்தின் அதிரடி பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது.

Recommended Video

Master Movie Audio Launch Date Revealed | Lokesh Kanagaraj | Thalapathy Vijay | VJS | Anirudh

பிகில் படத்தை தொடர்ந்து விஜய் நடிக்கும் படம் மாஸ்டர். லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். விஜய் ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார்.

வில்லனாக விஜய் சேதுபதி நடித்திருக்கிறார். சாந்தனு பாக்யராஜ், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

விஜய்யின் தோற்றம்

விஜய்யின் தோற்றம்

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் விஜய் மற்றும் விஜய் சேதுபதி லுக் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றன. பின்னர் வெளியிடப்பட்ட விஜய்யின் அடுத்த லுக்கும் வைரலானது. அதையும் ரசிகர்கள் டிரெண்டாக்கினர். இதையடுத்து படத்துக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது.

ரசிகர்களுடன் செல்ஃபி

ரசிகர்களுடன் செல்ஃபி

இந்தப் படத்தின் ஷூட்டிங் நெய்வேலியில் நடந்தபோது நடிகர் விஜய்யிடன் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து விசாரணை நடத்தினார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நெய்வேலிக்கு படப்பிடிப்புக்குச் சென்ற விஜய்யை பார்க்க திருவிழா போல ரசிகர்கள் கூடினர். அப்போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் எடுத்த செல்பி வைரலானது.

குட்டி ஸ்டோரி

குட்டி ஸ்டோரி

இந்நிலையில், இந்தப் படத்தின் முதல் பாடலான குட்டி ஸ்டோரி காதலர் தினத்தன்று கடந்த 14 ஆம் தேதி வெளியானது. அந்தப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளார். லெட் மி சிங் ஒரு குட்டி ஸ்டோரி என்று தொடங்கும் அந்தப் பாடலை அருண்ராஜா காமராஜ் எழுதி உள்ளார்.
அனிருத் இசையில் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இது. ஏற்கனவே கத்தி படத்துக்காக அனிருத் இசையில் செல்பி புள்ள பாடலை விஜய் பாடியிருந்தார்.

போஸ்ட் புரொடக்‌ஷன்

போஸ்ட் புரொடக்‌ஷன்

இந்தப் பாடல் வரிகள், ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் வைரலாக ஷேர் செய்யப்பட்டது. இதனால் பாடல் டிரெண்ட் ஆனது. இந்நிலையில் இந்தப் படத்தின் ஷூட்டிங் பெரும்பாலும் முடிந்துவிட்டது. நாளையுடன் மொத்த படப்பிடிப்பும் முடிவடைவதாகக் கூறப்படுகிறது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் ஒரு பக்கம் நடந்து வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் செய்யும் வேலைகளில் படக்குழு இறங்கியுள்ளது.

நட்சத்திர ஓட்டலில்

நட்சத்திர ஓட்டலில்

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழா, கோயமுத்தூரியில் நடப்பதாகச் செய்திகள் வெளியாயின. மாஸ்டர் பாடல் விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் எனவே கோவைக்கு மாற்றியதாகவும் கூறப்பட்டது. ஆனால், பாடல் வெளியீட்டு விழா சென்னையில்தான் நடக்கிறது. எம்.ஆர்.சி.நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில், பாடல்கள் வரும் 15 ஆம் தேதி வெளியாகிறது. இதன் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது.

அரசியல் பேச்சு

அரசியல் பேச்சு

பாடல் வெளியீட்டு விழா நிகழ்ச்சிகள், சமுக வலைத்தளங்களில் பரவாமல் இருப்பதைத் தடுக்க, செல்போன்களுக்கு அனுமதிக்க மறுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த விழாவில் நடிகர் விஜய், அரசியல் தொடர்பான விஷயங்களை பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வருமான வரித்துறை சோதனை நடந்துள்ள நிலையில், அரசியல் ஸ்டோரி ஏதும் சொல்வார் என்று ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X