twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    விஜய்யின் 'மாஸ்டர்'தமிழ் சினிமாவுக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.தயாரிப்பாளர் சிவா பேச்சு!

    By
    |

    சென்னை: மாஸ்டர் படம் சினிமாதுறைக்கு புதிய உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது என்று தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா கூறியுள்ளார்.

    Recommended Video

    KABADADAARI AUDIO LAUNCH | FILMIBEAT TAMIL

    கிரியேட்டிவ் என்டர்டெய்னர்ஸ் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் சார்பில் ஜி.தனஞ்செயன், லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் படம் 'கபடதாரி'.

    எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்! எனக்கா ரெட் கார்டு.. உள்ளே இருந்தபோது என் ஃபிரண்ட்ஸே நம்பிக்கை துரோகம் பண்ணாங்க.. பாலாஜி உருக்கம்!

    தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார்.

    நந்திதா ஸ்வேதா

    நந்திதா ஸ்வேதா

    ஜி.தனஞ்செயன், ஜான் மகேந்திரன், ஹேமந்த் ராவ் திரைக்கதை எழுதியுள்ள இந்தப்படத்திற்கு ராசாமதி ஒளிப்பதிவு செய்துள்ளார்.
    சைமன் கே.கிங் இசையமைத்துள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா சென்னை பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில் சிபிராஜ், நந்திதா ஸ்வேதா, ஜெயப்பிரகாஷ், ஜே.எஸ்.சதீஷ்குமார் உட்பட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

    கொரோனா பிரச்சனை

    கொரோனா பிரச்சனை

    சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, விஜய் ஆண்டனி ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, கபடதாரி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். கொரோனா பிரச்சனையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.சிறப்பு விருந்தினர்களாக தயாரிப்பாளர் டி.சிவா, விஜய் ஆண்டனி ஆகியோரும் கலந்துக் கொண்டார்கள். தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசும்போது, கபடதாரி படத்தை ஏப்ரல் அல்லது மே மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டோம். கொரோனா பிரச்சனையால் அது நடக்கவில்லை. படப்பிடிப்பு முடிவடைந்து சுமார் 6 மாதங்கள் எந்த பணிகளும் நடக்கவில்லை.

    பட்டை தீட்டினார்

    பட்டை தீட்டினார்

    ஆனால், அந்த ஆறு மாதங்களில் திரைக்கதை மற்றும் காட்சிகளை இயக்குநர் பிரதீப் பட்டை தீட்டியதால் படம் நேர்த்தியாக
    வந்துள்ளது. படம் விறுவிறுப்பாக நகரும். இந்த படத்திற்கு வேறு ஒரு ஹீரோவை நடிக்க வைக்கத் தான் முயற்சித்தேன். ஆனால், சிபிராஜ் நானே நடிக்கிறேன், என்று கூறினார். இந்த படத்தின் கேரக்டருக்கு கச்சிதமாக இருக்கிறார்.

    மாஸ்டர் உற்சாகம்

    மாஸ்டர் உற்சாகம்

    நந்திதா ஸ்வேதா வழக்கமான
    நாயகிகள் போல், டூயட் பாடல் கேட்காமல், கதாப்பாத்திரத்தை புரிந்துக் கொண்டு நடித்திருக்கிறார் என்றார். தயாரிப்பாளர் டி.சிவா பேசும்போது, மாஸ்டர் படம் நமக்கு புதிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. படம் வெளியான நாள் முதல் இன்று வரை சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.

    விஜய் ஆண்டனி

    விஜய் ஆண்டனி

    அந்த படம்தான் இப்போது சினிமாத்துறைக்கு பெரிய நம்பிக்கை கொடுத்திருக்கிறது. அந்த படம் கொடுத்த தைரியம்தான் இன்று கபடதாரி ரிலீஸ் குறித்து நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்' என்றார். இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி பேசியதாவது, 'இந்த படம் சிறப்பாக வந்துள்ளது.

    விமர்சிக்க வேண்டாம்

    விமர்சிக்க வேண்டாம்

    மாஸ்டர் போன்ற பெரிய படங்கள் வெற்றி பெற்றது போல, இந்த கபடதாரி படமும் பெரிய வெற்றி பெற வேண்டும். அதற்கு விமர்சகர்கள் ஒத்துழைக்க வேண்டும். இப்படி ஒரு கஷ்டமான காலக்கட்டத்தில், பெரிதாக விமர்சிக்காமல் இருப்பது நல்லது என்றார்.

    English summary
    Producer T.Siva said that, Vijay's 'Master' has given new confidence to tamil cinema.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X