அதுல உண்மை இல்லையாம்.. விஜய்யின் 'மாஸ்டர்' பற்றி மாஸ் அப்டேட்.. படக்குழு மீண்டும் விளக்கம்!

By

சென்னை: நடிகர் விஜய்யின் 'மாஸ்டர்' படம் பற்றி படக்குழு மீண்டும் விளக்கம் அளித்துள்ளது

Recommended Video

வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்கும் விஜய்.. இன்றைய டாப் 5 பீட்ஸில்!

கைதி ஹிட்டுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் படம், மாஸ்டர். விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி வில்லன். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர்.

கொரோனா தீவிரம்

கொரோனா தீவிரம்

சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீஸ் ஆக இருந்தது. அந்த நேரத்தில் கொரோனா பரவல் தீவிரம் அடைந்ததால், லாக்டவுன் பிறப்பிக்கப்பட்டது. இதனால் மாஸ்டர் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பேராசிரியராக

பேராசிரியராக

படத்துக்கு அனிருத் ரவிச்சந்தர் இசை அமைத்துள்ளார். அவர் இசையில் பாடல்கள் ஹிட்டாகி உள்ளன. இதில் முதன்முறையாக பேராசிரியராக நடிக்கிறார் நடிகர் விஜய். படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் என்றும் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என்றும் கூறி வருகின்றனர். தியேட்டர் எப்போது திறக்கப்படுமோ, அப்போது இந்த படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளது.

சூரரைப் போற்று

சூரரைப் போற்று

இந்நிலையில், கொரோனா காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்ட நிலையில், பல படங்கள் நேரடியாக ஓடிடி-யில் வெளியிடப்படுகின்றன. பொன்மகள் வந்தாள், பெண்குயின் தொடங்கி பல படங்கள் இதுவரை ஓடிடி-யில் ரிலீஸாகியுள்ளன. சூர்யாவின் சூரரைப் போற்று, விஜய் சேதுபதியின் க.பெ.ரணசிங்கம் போன்ற படங்களும் ஓடிடி-யில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓடிடி-யில் மாஸ்டர்

ஓடிடி-யில் மாஸ்டர்

இதைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் மாஸ்டர் படமும் ஓடிடி-யில் ரிலீஸாக இருப்பதாகவும் இதற்காக பிரபல ஒடிடி நிறுவனம் ஒன்றுடன் பேச்சுவார்த்தை நடப்பதாகவும் சினிமா வட்டாரத்தில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த சில நாட்களாக இந்தப் பேச்சு அதிகரித்துள்ளது.

தியேட்டரில்தான் ரிலீஸ்

தியேட்டரில்தான் ரிலீஸ்

இது தொடர்பாக மாஸ்டர் படக்குழு கூறும்போது, பெரிய படங்கள் தயாரித்து வரும் படக்குழுவினரிடம் ஓடிடி நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அதனால் மாஸ்டர் படம் பற்றியும் இப்படி செய்தி வந்திருக்கும். கண்டிப்பாக மாஸ்டர் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும். தியேட்டர்கள் திறந்ததும் எப்போது வெளியீடு என்பது குறித்து முடிவு செய்வோம்' என்று கூறியுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X