அச்சச்சோ.. லீக்கானதா மாஸ்டர் படத்தின் கதை? குடிக்கு அடிமையான விஜய்.. வைரலாகும் 'குட்டி' ஸ்டோரி!
சென்னை: மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகவுள்ள நிலையில் படத்தின் கதை இதுதான் என்று சமூக வலைதளங்களில் ஒரு குட்டி ஸ்டோரி வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் மாஸ்டர். மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு பாக்கியராஜ் என பெரும் நடிகர் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.
கடந்த ஏப்ரல் மாதமே இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தனர். கொரோனா பரவல் லாக்டவுன் காரணமாக மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது.

பெரிய பட்ஜெட்
மாஸ்டர் திரைப்படம் ஓடிடியில் ரிலீஸ் ஆகும் என்றும் அவ்வப்போது தகவல் பரவியது. ஆனால் பெரிய பட்ஜெட் படம் என்பதால் தியேட்டரில் தான் வெளியிடுவோம் என படக்குழு திட்டவட்டமாக அறிவித்தது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு
படத்தின் டீசர் தீபாவளிக்கு ரிலீஸானது. இதனை தொடர்ந்து மாஸ்டர் படம் பொங்கலுக்கு ரிலீஸாகும் என்று தகவல் வெளியானது. இந்நிலையில் மாஸ்டர் படம் வரும் 13ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் ஆக உள்ளதாக நேற்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

மாஸ்டர் படத்தின் கதை
இதனால் இந்த ஆண்டு பொங்கல் மாஸ்டர் பொங்கல் என இப்போதே கொண்டாட்டத்தை தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். இந்நிலையில் மாஸ்டர் படத்தின் கதை இதுதான் என ஒரு குட்டி ஸ்டோரி சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

மதுபோதைக்கு அடிமை
அதாவது, மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் இளம் பேராசிரியராக இருப்பதாகவும், மேலும் மதுபோதைக்கு அடிமையானவராக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விஜய், விஜய் சேதுபதியால் நடத்தப்படும் சிறார் பள்ளிக்கு 3 மாதம் பாடம் கற்பிக்க அனுப்பப்படுகிறார்.

விஜய் சேதுபதியுடன் மோதல்
அங்கு விஜய் சேதுபதி குழந்தைகளை வைத்து சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார். இதனை வெளிச்சத்திற்கு கொண்டுவர விஜய், விஜய் சேதுபதியின் கும்பலுடன் மோதுகிறார். இதுதான் படத்தின் கதை என்று கூறப்பட்டுள்ளது.

படத்தின் மொத்த நேரம்
மேலும், சிங்கப்பூர் தியேட்டரின் மூலம் இது உறுதி செய்யப்படுவதாகவும் கூறியுள்ளார். அதோடு மாஸ்டர் திரைப்படம் 2 மணிநேரம் 59 நிமிடங்கள் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

சைலன்ஸ்டு படம் போல்
மேலும் 2011ஆம் ஆண்டு வெளியான கொரிய படமான சைலன்ஸ்டு படத்தை போன்றே மாஸ்டர் படம் இருப்பதாகவும் தகவல்கள் பரவி வருகிறது. ஆனால் இதனை விஜயின் ரசிகர்கள் மறுத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











