தீபாவளிக்கு வெளியாகிறதா மாஸ்டர் டீசர்? தீயாய் பரவும் தகவல்.. தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: மாஸ்டர் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

மாநகரம், கைதி படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் மாஸ்டர். இந்த படத்திர் லீடில் ரோலில் விஜயும் அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்துள்ளனர்.

விஜய்குக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன்தாஸ், ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கொரோனா அச்சுறுத்தல்

கொரோனா அச்சுறுத்தல்

அனிருத் இசையில் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் மாஸ்டர் படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் மற்றும் லாக்டவுன் காரணமாக படத்தின் ரிலீஸ் தள்ளிபோயுள்ளது.

தயாரிப்பு தரப்பு திட்டவட்டம்

தயாரிப்பு தரப்பு திட்டவட்டம்

திரையரங்குகள் மூடப்பட்டதால் மாஸ்டர் படம் ஓடிடி தளத்தில் வெளியிடப்படும் என அவ்வப்போது தகவல் பரவியது. ஆனால் மாஸ்டர் படம் பெரிய பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளதால் தியேட்டரில் தான் ரிலீஸ் செய்யப்படும் என திட்டவட்டமாக அறிவித்தது தயாரிப்பு தரப்பு.

மாஸ்டர் டீசர்

இந்நிலையில் படத்தின் டீசர் தீபாவளிக்கு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமூக வலைதளங்களிலும் #MasterTeaser என்ற ஹேஷ் டேக் ட்ரென்ட்டாகி வருகிறது. இந்த ஹேஷ்டேக்கை குறிப்பிட்டு விஜய் ரசிகர்கள் டீசர் தீபாவளிக்கு ரிலீஸா அதற்கு முன்னதாக 13ஆம் தேதியே ரிலீஸா என கேட்டு வருகின்றனர்.

வாத்தி கம்மிங்டோய்

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகாத நிலையில் சில நெட்டிசன்கள் இன்னைக்கு சம்பவம் உறுதி என்றும் வாத்தி கம்மிங்டோய் என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.

அப்டேட் வருதான்னு பார்போம்

விஜய் ரசிகரான இவர், கிளம்புவோம்.. சாயங்காலம் மாஸ்டர் அப்டேட் வருதான்னு பார்ப்போம் என குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X