twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    7 பிரிவுகளில் விஜய்யின் மாஸ்டர்… தரமான சம்பவம் வெயிட்டிங்ல இருக்கு: இதுதான் அடிதூள் அப்டேட்

    |

    பெங்களூரு: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம், கடந்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியானது.

    Recommended Video

    Vicky Stunt Master| ஸ்டண்ட் யூனியன் மட்டும் தான் ரொம்ப ஸ்ட்ரிக்ட் | *INTERVIEW

    மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடித்திருந்தனர்.

    ஆக்சன் ஜானரில் வெளியான 'மாஸ்டர்' 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ப்ளாக் பஸ்டர் ஹிட் லிஸ்ட்டில் இணைந்தது.

    நட்சத்திரம் நகர்கிறது கதை இதுதானா?: இளையராஜாவுடன் இணைய முடியும் என்று நினைக்கவில்லை: ரஞ்சித் பேச்சுநட்சத்திரம் நகர்கிறது கதை இதுதானா?: இளையராஜாவுடன் இணைய முடியும் என்று நினைக்கவில்லை: ரஞ்சித் பேச்சு

    ஜேடியாக கலக்கிய விஜய்

    ஜேடியாக கலக்கிய விஜய்

    'மாநகரம்', 'கைதி' என அடுத்தடுத்து இரண்டு தரமான படங்களை இயக்கியிருந்த லோகேஷ் கனகராஜ், மூன்றாவது படத்தில் விஜய்யுடன் இணைந்தார். 'மாஸ்டர்' என்ற டைட்டிலில் உருவான இப்படத்தில், விஜய் ஜேடி என்ற காலேஜ் புரொபசராக நடித்திருந்தார். அதுவரை பார்த்திடாத செம்ம ஸ்மார்ட்டான ஸ்டைலில் விஜய் நடித்தது, அவரது ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. விஜய்யின் காஸ்ட்யூம், மேனரிசம் என அனைத்தும் பட்டையைக் கிளப்பின.

    வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி

    வில்லனாக மிரட்டிய விஜய் சேதுபதி

    'மாஸ்டர்' படத்தில் விஜய்க்கு ஒரு மாஸ் என்றால், அவருக்கு வில்லனாக பவானி என்ற கேரக்டரில் நடித்த விஜய் சேதுபதி, நடிப்பில் பங்கம் செய்தார். விஜய்யை அவர் வாத்தி என அழைக்கும் காட்சிகளில் தியேட்டரில் விசில் பறந்தன. விஜய்யும் விஜய் சேதுபதியும் எதிரும் புதிருமாக வில்லத்தனம் செய்து தெறிக்கவிட்டனர்.

    வசூலை வாரிகுவித்த மாஸ்டர்

    வசூலை வாரிகுவித்த மாஸ்டர்

    விஜய், விஜய் சேதுபதி தவிர மாளவிகா மோகனன், சாந்தனு, மகேந்திரன், ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ், பூவையார் உள்ளிட்ட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். கொரோனா பரவல், திரையரங்குகளில் 50 சதவித பார்வையாளர்களுக்கு மட்டுமே அனுமதி என ரொம்பவே இக்கட்டான நிலையில் வெளியான 'மாஸ்டர்', வசூலில் வாகை சூடியது. இதனால், விஜய்யும் லோகேஷ் கனகராஜ்ஜும் தற்போது மீண்டும் இணைந்துள்ளனர்.

    7 பிரிவுகளில் நாமினேஷன்ஸ்

    7 பிரிவுகளில் நாமினேஷன்ஸ்

    தென்னிந்திய திரைப்படங்களுக்கான விருதுகளில் ரொம்பவே முக்கியமானது, SIIMA எனப்படும் தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள். இந்த விழா செப்டம்பர் மாதம் பெங்களூருவில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இத்திரைப்பட விருது விழாவில் 'மாஸ்டர்' திரைப்படம் 7 பிரிவுகளில் போட்டியிடுகிறது. இதனால், விஜய் ரசிகர்கள் ரொம்பவே உற்சாகத்தில் உள்ளனர்.

    சிறந்த நடிகர் விஜய்?

    சிறந்த நடிகர் விஜய்?

    சிறந்த இயக்குநர் பிரிவில் லோகேஷ் கனகராஜ், சிறந்த அறிமுக நடிகை பிரிவில் மாளவிகா மோகனன், சிறந்த ஒளிப்பதிவாளர் பிரிவில் சத்யன் சூரியன், சிறந்த சப்போர்ட்டிங் ஆக்டர் பிரிவில் மகேந்திரன், சிறந்த இசையமைப்பாளர் பிரிவில் அனிருத் ஆகியோர் போட்டியிடுகின்றனர். அதேபோல் சிறந்த வில்லன் பிரிவில் விஜய் சேதுபதியும், சிறந்த நடிகர் பிரிவில் விஜய்யும் போட்டியிடுகின்றனர். இதனை கொண்டாடி வரும் விஜய் ரசிகர்கள், சிறந்த நடிகருக்கான வாக்கெடுப்பில் விஜய்க்கு ஓட்டு போட்டு வருகின்றனர். இது மாஸ்டர் படக்குழுவை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    English summary
    Vijay’s Master team was nominated on 7 categories in SIIMA 2022
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X