நாளை மாலை வெளியாகிறது மாஸ்டர் படத்தின் தெலுங்கு டீசர்.. இப்போதே தெறிக்கும் டிவிட்டர்!

சென்னை: விஜய் நடிப்பில் உருவாகியுள்ள மாஸ்டர் தெலுங்கு படத்தின் டீசர் நாளை மாலை ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜய்யின் 64வது படமான மாஸ்டர் படத்தை மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளார்.

மாளவிகா மோகனன், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, ஷாந்தனு, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

கொரோனாவால் லேட்

கொரோனாவால் லேட்

கடந்த ஏப்ரல் மாதமே ரிலீஸ் ஆக வேண்டிய இந்தப் படம் கொதரோனா காரணமாக ரிலீஸ் செய்ய முடியாமல் தள்ளிப்போனது. இதனால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் மாஸ்டர் படத்தின் ட்ரெயிலரையாவது ரிலீஸ் செய்யுங்கள் என கேட்டு வந்தன.

தீபாவளி பரிசு

தீபாவளி பரிசு

இதனை தொடர்ந்து கடந்த நவம்பர் மாதம் தீபாவளி பண்டிகை நாளில் மாஸ்டர் படத்தின் டீஸர் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு தீபாவளி பரிசாக அமைந்தது. மாஸ்டர் படத்தின் டீசர் அதிக வியூஸ்களையும் குவித்தது.

படக்குழு மறுப்பு

படக்குழு மறுப்பு

இதனை தொடர்ந்து நெட்ஃபிளிக்ஸ் தளத்தில் படத்தை ரிலீஸ் செய்வதற்கான பணிகள் நடைபெறுவதாக தகவல் பரவியது. ஆனால் அதனை மறுத்த படக்குழு தியேட்டரில்தான் படம் ரிலீஸ் செய்யப்படும் என அறிவித்தது.

தெலுங்கு மாஸ்டர்

தெலுங்கு மாஸ்டர்

இந்நிலையில் மாஸ்டர் படம் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது மாஸ்டர் தெலுங்கு படத்தின் டீசர் நாளை மாலை ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

டிவிட்டர் டிரென்டிங்

டிவிட்டர் டிரென்டிங்

நாளை மாலை 6 மணிக்கு மாஸ்டர் படத்தின் டீஸர் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ரசிகர்கள் இப்போதே கொண்டாட தொடங்கிவிட்டனர். #MasterTeaser என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெட் செய்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X