த்ரிஷ்யம் 2, கர்ணனை பின்னுக்குத் தள்ளி இந்தியளவில் IMDBல் நம்பர் ஒன் இடத்தை பிடித்த மாஸ்டர்!

சென்னை: இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்கள் மற்றும் வெப் தொடர்களிலேயே சிறந்த படைப்பாக மாஸ்டர் திரைப்படம் முதலிடத்தை பிடித்துள்ளது.

மோகன் லாலின் த்ரிஷ்யம் 2 மற்றும் தனுஷின் கர்ணன் உள்ளிட்ட படங்களும், பாலிவுட் படங்களும் நிறைந்த இந்த போட்டியில் தளபதி விஜய்யின் மாஸ்டர் படம் டாப் இடத்தை பிடித்து இருப்பதை தளபதி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

சமீபத்தில் டிவியில் ஒளிபரப்பப்பட்ட மாஸ்டர் இந்தி வெர்ஷனான விஜய் தி மாஸ்டர் படத்தையும் அதிகளவில் பார்த்தது குறிப்பிடத்தக்கது.

முதலிடத்தில் மாஸ்டர்

முதலிடத்தில் மாஸ்டர்

ஐஎம்டிபி தர வரிசை பட்டியலில் இந்த ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே முதலிடத்தை மாஸ்டர் திரைப்படம் பிடித்துள்ளது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய்சேதுபதி நடிப்பில் வெளியான இந்த படம் வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியை பிடித்தது. மேலும், விமர்சன ரீதியாகவும் பாராட்டுக்களை குவித்தது.

நான்காவது இடத்தில்

நான்காவது இடத்தில்

மாஸ்டர் படத்தை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் ஆஸ்பிரண்ட்ஸ் எனும் வெப்சீரிஸும் மூன்றாவது இடத்தில் பிரியங்கா சோப்ராவின் தி ஒயிட் டைகர் படமும் இடம்பெற்றுள்ளன. நான்காவது இடத்தில் அமேசான் பிரைமில் வெளியான மோகன்லாலின் த்ரிஷ்யம் 2 இடம்பிடித்துள்ளது.

தனுஷை முந்திய தமன்னா

தனுஷை முந்திய தமன்னா

இந்த பட்டியலில் 5வது இடத்தில் நடிகை தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியான நவம்பர் ஸ்டோரி இடம்பெற்றுள்ளது. முதன் முறையாக வெப்சீரிஸ் பக்கம் வந்துள்ள தமன்னாவின் இந்த கிரைம் த்ரில்லர் வெப்சீரிஸ் இந்தியளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

6வது இடத்தில் கர்ணன்

6வது இடத்தில் கர்ணன்

நடிகர் தனுஷின் கர்ணன் திரைப்படம் IMDB சிறந்த டாப் 10 படங்களில் 6வது இடத்தை பிடித்துள்ளது. இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், கெளரி கிஷன், நட்டி நடராஜ் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். அமேசான் பிரைமில் தற்போது கர்ணன் ஸ்ட்ரீமிங்காகி வருகிறது.

மகாராணி

மகாராணி

7வது இடத்தில் பவன் கல்யாணின் வக்கீல் சாப் படம் இடம் பிடித்துள்ளது. 8வது இடத்தில் பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடித்த மகாராணி வெப்சீரிஸ் இடம் பிடித்துள்ளது. 9வது இடத்தில் கிராக் படமும் 10வது இடத்தில் தி கிரேட் இந்தியன் கிட்சன் படமும் இடம்பிடித்துள்ளன.

ஏன் இல்லை

ஏன் இல்லை

இந்த IMDB டாப் ரேட்டிங்கில் ஜனவரி 1 முதல் ஜூன் 3ம் தேதி வரை ஒடிடி தளங்களில் வெளியான படைப்புகள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. ஜூன் மாதம் 4ம் தேதி சமந்தா மற்றும் மனோஜ் பாஜ்பாய் நடிப்பில் வெளியான தி ஃபேமிலி மேன் வெப் தொடர் இடம் பெறவில்லை. ஆண்டு இறுதியில் இந்த பட்டியலில் மாற்றம் நிகழும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X